மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தூங்குவது நல்லதல்ல என நினைக்கிறீர்களா ?? அதனால் வரும் நன்மை என்ன ?? அதன் ஆபத்துக்கள் என்ன?

Health

பொதுவாக மதிய நேரத்தில் சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது, உடல் எடை கூடும், மந்தமாக இருக்கும், அடுத்தடுத்த வேலைகளை செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகிவிடும் என்ற பரவலான கருத்து உள்ளது.ஆனால் ஒரு சிலருக்கு மதிய நேரத்தில் 10 நிமிடமாவது தூங்கி எழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.அதாவது ‘ஒரு குட்டி தூக்கம் போட்ட நல்லா இருக்குமே’ என்று பலருக்கும் தோன்றுவது இயல்பு. ஒரு சிலர் அந்த 10 முதல் 15 நிமிடங்கள் வரை தூங்கி எழுந்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாகவும்,

பிரஷ்ஷாகவும் உணர்வார்கள்.மதிய நேரத்தில் தூங்குவது உங்களை சோம்பலாக்கி விடுமா அல்லது சுறுசுறுப்பாக்குமா என்ற கேள்விக்கு இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர் விளக்கம் அளித்துள்ளார். உண்மையில் மதிய நேரத்தில் பலவித நன்மைகளை அளிக்கும் என்று கூறியுள்ளார்.
செரிமானத்தை மேம்படுத்தும்மதிய உணவுக்குப் பிறகு கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பது உங்கள் உடலை ரிலாக்ஸாக்கி உணவை செரிமானம் செய்வதில் கவனம் செலுத்தும்.

சாப்பிட்ட பிறகு பரபரப்பாக வேலை செய்வது செரிமானத்தை தாமதப்படுத்தும்.எனவே நீங்கள் சாப்பிட்ட உணவில் இருந்து போதுமான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைக்காது. இதுவே நீங்கள் கொஞ்சம் சில நிமிடங்களுக்கு ஓய்வாக இருக்கும் போது செரிமானம் துரிதமாக, அது சம்மந்தப்பட்ட கோளாறுகளைத் தவிர்க்கலாம்.வயிறு உப்புசம் குறையும்ஒரு சிலருக்கு சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம் ஏற்படும். இதற்கு காரணம் உங்கள் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகளை சாப்பிடுவதாக இருக்கலாம்,

-Advertisement-

அல்லது நீங்கள் அதிவேகமாக சாப்பிட்டு இருக்கலாம் அல்லது அதிகமாக சாப்பிட்டு இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சாப்பிட்ட பிறகு மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் தூங்குவது மேலே கூறியது போல செரிமானத்தை விரைவாக்கி வயிற்று உப்புசத்தை குறைத்து அசௌகரியத்தை போக்கும்.
இரவில் நன்றாக தூக்கம் வரும்பொதுவாகவே பகலில் தூங்கினால் இரவு தூக்கம் வராது எனவே பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் சில நிமிடங்கள் தூங்குவது பகல் தூக்கம் என்ற கணக்கில் சேராது. அதிகபட்சமாக 15 – 20 நிமிடங்கள் வரை

மதியம் 1:00 மணி முதல் 3:00 வரை மணி தூங்கலாம். இந்த குட்டி தூக்கம் உங்கள் இரவு தூக்கத்தை நிச்சயமாக பாதிக்காது. ஒருவேளை நீங்கள் மதிய உணவு உண்ட பிறகு 1 மணி நேரத்துக்கும் மேலாக தூங்கினால் தான் உங்களின் இரவு தூக்கம் பாதிக்கப்படும்.ஹார்மோன் குறைபாடுகளுக்கான தீர்வுபலவித ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு நோய்கள் மற்றும் உடல்நல குறைபாடுகளை உண்டாகும். ஹார்மோன் குறைபாடு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம்

தூக்கமின்மை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நீர் கட்டிகள், தைராய்டு மற்றும் நீரிழிவு ஆகிய குறைபாடுகளால் அவதிப்படுபவர்கள் பகல் தூக்கத்தின் மூலம் பயன்பெறலாம்.பகலில் சிறிது நேரம் தூங்குவது உங்கள் உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்து பேலன்ஸ் செய்ய உதவுகிறது. இதனால் ஹார்மோன் சுரப்பில் இருக்கும் குறைபாடுகள் ஓரளவுக்கு சரியாகிறது.PCOS-ஐ எதிர்த்து போராட பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்.மனநிலை மற்றும் ஞாபகம் மேம்படும்நன்றாக தூங்கி

எழுந்தவுடன் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? ஒருவர் இரவில் மிகவும் நன்றாக தூங்கி எழும்போது காலையில் மகிழ்ச்சியாக எந்தவித டென்ஷனும் இல்லாமல் எழுந்து கொள்வார்கள். இதே போன்ற மதிய நேரத்தில் நீங்கள் கால் மணி நேரம் தூங்கினாலும் கூட உங்கள் மனநிலை ஆரோக்கியமானதாக இருக்கும். எந்த படபடப்பும் டென்ஷனும் இல்லாமல் உங்கள் நீங்கள் உற்சாகமாக வேலை செய்யலாம். அது மட்டுமின்றி குட்டி தூக்கம் உங்கள் ஞாபகத் திறனையும் கவனிக்கும்

ஆற்றலையும் மேம்படுத்தும்.மதிய நேரத்தில் எப்படித் தூங்கினால் நன்மைகளை கிடைக்கும்?சாப்பிட்ட பிறகு தூங்க வேண்டும்.நீங்கள் டேபிளில் தலைசாய்த்து தூங்கலாம் அல்லது படுத்துக்கொண்டு தூங்கலாம்.தூங்குவதற்கு உகந்த நேரம் மதியம் 1 முதல் 3 மணி வரை.அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை தூங்கலாம்மதிய தூக்கம் என்பது 3 மணிக்குள் தூங்கும் நேரத்தைத்தான் குறிக்கிறது. எனவே 3 மணிக்கு மேல் தூங்குவது உங்கள் இரவு தூக்கத்தை பாதிக்கும். அதை தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி மதிய உணவுக்குப் பிறகு காபி தேநீர் போன்ற எந்த பானத்தையும் குடிப்பதை தவிர்க்கலாம்.