நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்க கூடியவை காய்கறிகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். குறிப்பிட்ட காய்கறிகள் சிலருக்கு உணவு, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பொறுத்து அதிகரித்த நன்மைகளை வழங்க கூடும். ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள்நிறைந்த காய்கறிகள் நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கீரைகள் காய்கறிகளில் நான் அனைவரும் வாரம் 2 அல்லது 3 முறையாவது தவறாமல் சேர்த்து கொள்ள கூடிய ஒன்றாக இருப்பது கீரைகள். மிகவும் ஆரோக்கியம் தர கூடிய காய்கறிகளில் கீரைகள் தான் முதலிடத்தில் இருக்கின்றன. புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்த சூப்பர்ஃபுட்களில் கீரைகளும் அடக்கம். ஒரு கப் கீரை உங்கள் டயட்டில் இடம் பெறுவது உங்கள் தினசரி வைட்டமின் ஏ தேவைகளில் 56 சதவீதத்தையும், உங்கள் முழு தினசரி வைட்டமின் கே தேவையையும் பூர்த்தி செய்கிறது. கீரைகளில் காணப்படும் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். அதே போல கீரைகளை உணவில் வழக்கமாக சேர்த்து கொள்வது ரத்த அழுத்தத்தை குறைப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். பார்வையிழப்பு மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
கேரட் கேரட்டில் வைட்டமின் ஏ நிரம்பியுள்ளது. ஆக்ஸிஜனேற்றியான் பீட்டா கரோட்டின் கேரட்டிற்கு ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது. இதுவே புற்றுநோய் தடுப்புக்கும் உதவுகிறது. வாரம் தவறாமல் கேரட்களை உணவில் சேர்த்து கொள்வது புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 5% வரை குறைக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல முக்கிய சத்துக்கள் நிரம்பி உள்ளதன் காரணமாக ரத்த அழுத்தத்தை குறைக்கும்.கண் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் எடையை குறைக்க உதவும். டயட்டில் கேரட்டை சேர்த்து கொள்வது புகைப்பிடிப்பவர்களுக்கும் கூட நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்பது ஒரு ஆவின் மூலம் தெரிய வந்துள்ளது.
ப்ரோக்கோலி முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்த தாவரமான ப்ரோக்கோலியில் வைட்டமின் சி , கே மற்றும் ஏ உள்ளிட்டவை அதிகம் காணப்படுகிறது. 91 கிராம் ப்ரோக்கோலி உங்களுக்கு வைட்டமின் கே தினசரி உட்கொள்ளலில் 116% மற்றும் தினசரி வைட்டமின் சி உட்கொள்ளலில் 135% அளவை வழங்குகிறது. இத்துடன் ஊட்டமுறை ஃபைபர் அதிகம் இருப்பதால் புற்றுநோய்க்கு எதிரான ஆற்றல்மிக்க பண்புகளுடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. டயட்டில் அடிக்கடி ப்ரோக்கோலி சேர்த்து கொள்வது பல நாட்பட்ட நோய்களைத் தடுக்க உதவும். மேலும் இதய நோய்களைத் தடுப்பதற்கும் ப்ரோக்கோலி உதவுகிறது.
பூண்டு ஒரு மருத்துவ தாவரமாக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது பூண்டு. பூண்டின் முக்கிய செயலில் உள்ள கலவை அல்லிசின். இது பூண்டின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணம். பூண்டில் மாங்கனீஸ், வைட்டமின் பி 6, வைட்டமின் சி மற்றும் செலினியம் நிறைந்து காணப்படுகிறது. இவை தவிர உடலுக்கு நன்மை தர கூடிய அளவு கால்சியம், தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் வைட்டமின் பி 1 உள்ளிட்ட சத்துக்களும் பூண்டில் இருக்கின்றன. இது ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் தன்மை உடையது. மேலும் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. புற்றுநோய் தடுப்பிலும்பூண்டு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இனிப்பு உருளைக்கிழங்கு இனிப்பு உருளைக்கிழங்கானது அதன் நிறம், சுவை மற்றும் ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதில் தனித்து நிற்கிறது. ஒரு மீடியம் சைஸ் இனிப்பு உருளைக்கிழங்கு உங்களுக்கு நல்ல அளவு புரதம், வைட்டமின் சி, வைட்டமின் பி 6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களை வழங்குகிறது. உங்கள் டயட்டில் இவற்றை சேர்த்து கொள்வது நுரையீரல் புற்றுநோய் உட்பட பல வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவும். ரத்த சர்க்கரை அளவு மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கவும் இனிப்பு உருளைக்கிழங்கு உதவும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.