அட இனிமேல் பாத்திரம் கழுவுவதற்கு கடையில் சோப்பு வாங்க தேவையில்லை !! இதோ எலுமிச்சை பழத்தின் தோலை இப்படி பயன்படுத்தினால் போதும் ..!!!

Health

பெண்கள் அன்றாடம் செய்யும் வேலைகளில் இதுவும் ஓன்று. அது என்னவென்று யோசிக்கிறீர்களா..? அது வேறவொன்றும் இல்லை பாத்திரம் கழுவுவதை தான் கூறுகின்றோம். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தினமும் செய்யும் வேலைகளில் பாத்திரம் கழுவுவதும் ஒன்றும். சரி பாத்திரம் கழுவுவதற்கு நாம் கடைகளில் விற்கும் சோப்பு அல்லது லிக்விடு வாங்கி வந்து பயன்படுத்துவோம்.

அதில் கெமிக்கல் சேர்ப்பதால் சில நாட்களுக்கு அப்புறம் கைகளில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் வீட்டிலேயே பாத்திரம் கழுவும் லிக்விடு தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!எலுமிச்சை பழம் – 5,உப்பு – 3 ஸ்பூன்,பேக்கிங் சோடா – 3 ஸ்பூன்,வினிகர் – 100 ml,டிட்டர் ஜெண்ட் லிக்விடு – 50 ml முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில்

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.பின் 5 எலுமிச்சை பழத்தின் தோலை மட்டும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் 3 ஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். இதை 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.பின்பு அதில் பேக்கிங் சோடா 3 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து 15 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும்.பின் அதன் நிறம் மாறியதும்

-Advertisement-

அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.பின் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதில் 100 ml வினிகரை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் டிட்டர் ஜெண்ட் லிக்விடு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது டிட்டர்ஜெண்ட் பவுடரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.அவ்வளவு தான் பாத்திரம் கழுவும் லிக்விடு தயார். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். பின் இந்த லிக்விடை பாத்திரம் கழுவுவதற்கு பயன்படுத்தலாம். பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சென்று மாறிவிடும்.