பக்கவாதம் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே காட்டும் அறிகுறிகள் என்னென்ன ?? நாம் அவற்றை எப்படி கண்டுபிடிப்பது ..!!

Health

பக்கவாத அறிகுறிகள் ஏற்படும் நபர்களை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது அவசியம். ஏனெனில் அறிகுறிகள் மோசமானால் மூளை செயலிழப்பு உண்டாக வாய்ப்புள்ளது. மூளைக்கு போகும் ஆக்ஸிஜன் தடைபடுவதால் மூளை செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்து விடும். இதுவே நாளடைவில் பக்கவாதத்தை உண்டாக்கி நகர முடியாத நிலைக்கு கொண்டு வந்து விடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றைய சூழலில் பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் இரண்டுமே மக்களிடையே அதிகரித்து வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பக்கவாதம் போன்ற உடல் நிலைக்கு உடனடி மருத்துவ கவனம் அவசியம். இதன் அறிகுறிகளை கண்டுக்காமல் விட்டால் நாளடைவில் உடல் செயலிழப்பு ஏற்பட்டு ஒரே இடத்தில் முடங்கி இருக்க வேண்டிய சூழல் உண்டாகலாம்.

பக்கவாதம் என்பது மூளைத் தாக்குதல் , மூளையில் இரத்தக் குழாய் அடைப்பு அல்லது வெடிப்பு ஏற்படும் போது ஏற்படுகிறது. இப் பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பு சில அறிகுறிகள் தென்படுகின்றன. அவற்றை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.நமது இரத்தத்தின் வழியாகத்தான் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. மூளைக்கு தேவையான ஆக்சிஜன் o2 வழங்கல் தடைப்பட்டால் பக்கவாதம் ஏற்படலாம்.

-Advertisement-

எனவே மூளைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இரத்த நாளங்கள் வழங்குவது அவசியம் ஆகிறது. தமனிக் குழாய்களில் அடைப்பு அல்லது மூளை அல்லது இரத்த நாளங்களில் காயம் (அழுத்தம் அல்லது அதிர்ச்சி காரணமாக இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் வழங்குவது துண்டிக்கப்பட்டால் அது மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால், மூளை திசு இறக்கத் தொடங்குகிறது.

பக்கவாத அறிகுறிகள் :உடலின் ஒரு பகுதியை நகர்த்த முடியாமல் போதல்.உடலின் ஒரு பகுதியில் பலவீனம் உண்டாதல்.உடலின் ஒரு பகுதியில் மட்டும் உணர்வின்மை ஏற்படுதல்.வார்த்தைகளைப் பேசவோ புரிந்து கொள்ளவோ இயலாத தன்மை.தொடர்பு கொள்வதில் சிரமம் உண்டாதல்.விழுங்குவதில் சிரமம் ஏற்படுதல்.பார்வை இழப்பு.ஞாபக மறதி.குழப்பம்.மோசமான உடல்நிலை.ஆளுமை மாறுதல், உணர்ச்சிப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம்.