தினம் ஒரு தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பல நன்மைகள் ..!!

Health

நெல்லிக்காயின் நன்மைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து உட்கொண்டு வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காய் ஏற்கனவே புளிப்பு என்பதால், அதனை தித்திக்கும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும். நெல்லிக்காயை தேனில் ஊற வைப்பதால் சுவை மட்டுமின்றி, அதன் சக்தியும் இரண்டிப்பாகும்.

அதிலும் இதனை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். கடைகளில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் விற்கப்படுகிறது. இருப்பினும் இதனை வீட்டிலேயே செய்யலாம். அதற்கு ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதியளவு தேன் நிரப்பி அதில் நெல்லிக்காய்களைப் போட்டு மூடி வைக்க வேண்டும்.

சில நாட்கள் கழித்து பார்த்தால், நெல்லிக்காய் தேனில் நன்கு ஊறி மென்மையாக இருக்கும்.கல்லீரல் சுத்தமாகும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய், கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, கல்லீரல் சிறப்பாக செயல்பட்டு, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் இது மஞ்சள் காமாலைக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்

-Advertisement-

ஆஸ்துமா ஆஸ்துமா மற்றும் இதர சுவாச பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை உட்கொண்டு வர, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், டாக்ஸின்கள் மற்றும் நுரையீரலை ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும். இதனால் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

சளி, இருமல் மற்றும் தொண்டைக்கட்டு உங்களுக்கு சளி, இருமல் மற்றும் தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகள் இருந்தால், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயில் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து உட்கொண்டு வந்தால், மருத்துவ குணங்களால் கிருமிகள் அழிக்கப்பட்டு, இப்பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்கும் தினமும் ஆண்கள் மற்றும் பெண்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனையைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தடுக்கப்படும் மற்றும் மாதவிடாய் சுழற்சியும் சீராக்கப்படும்.