தினந்தோறும் வேப்பிலை மென்று சாப்பிட்டால் ஏற்படும் பல நன்மைகள் பற்றி நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் ..!!

Health

வேப்பமரம் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. ஆயுர்வேதத்தில் முக்கிய மருந்தாக சொல்லப்படும் இதை முன்னோர்கள் காலத்தில் உணவாகவே பயன்படுத்தி வந்தார்கள். தினமும் 2 வேப்பிலை அல்லது 4 வேப்பம்பூவை மென்றுஇதை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் கிடைக்கும் நன்மைகள்.இதன் பட்டை, இலை, வேப்பங்கொட்டை என்பது தாண்டி இதன் பூக்களும் பிரபலமானவை.

மருந்துகளில் முக்கியமானவை. வேம்பு உடலில் திசுக்களை குணப்படுத்துகிறது. பாதுகாக்கிறது மற்றும் உடலை புத்துயிராக வைத்திருக்கிறது. வேப்பம்பூவை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.உங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் ஃப்ரீ ரேடிக்கல்கள் மாசுக்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை நீக்குகிறது. இதையொட்டி இது செல்லுலர் மட்டத்தில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.

அழற்சி எதிர்ப்புவீக்கமடைந்த தசைகள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்புகளை ஆற்ற உதவுகிறது. அதாவது உங்கள் குடல், மூட்டுகள் மற்றும் முதுகெலும்பு எப்போதும் ஆற்றலுடன் இருக்கும். இளமையாக வைத்திருக்க செய்யும்.நுண்ணுயிர் எதிர்ப்புபாக்டீரியா வைரஸ்கள், பூஞ்சை போன்ற அனைத்து நோயை உண்டாக்கும் கிருமிகளையும்

-Advertisement-

எதிர்த்து போராடுகிறது. இளம் வயதினருக்கும். வயதானவர்களுக்கும் உள்ள வீரியம் மிக்க நோய் த்தொற்றுகளுக்கும் இது ஒரு மூலிகையாக இருக்கிறது.உடலில் இருக்கும் நச்சுக்களையும் நீக்கும்.காய்ச்சல், மலேரியா போன்ற தொல்லை தரும் நோய்களில் இருந்து உங்களது மீட்சியை துரிதப்படுத்தும்.இரத்த சர்க்கரை குறைவுஇரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் மூலக்கூறுகளை அகற்றி அவை அதிகரிப்பதை தடுக்கும். இதனால் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்கும்.

வயிற்றுப்புழுக்கள்குடல் புழுக்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம். இதனால் பசியின்மை உண்டாகும். உடல் மெலிவு உண்டாகும். உடல் ஊட்டச்சத்து உறிஞ்சுவதில் சிக்கல் உண்டாகும். ஆனால் வேப்பம்பூ மென்று சாப்பிடுவதால் அவை வயிற்றில் இருந்து வெளியேற்றப்படும்.சருமத்துக்கு நன்மை செய்யும்வேப்பம்பூ சாறுகள் சருமத்தின் ஊட்டச்சத்து தேவைகளை நிரப்பும். நீடித்த பிரகாசம் அளிக்கும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்.

தூசு மற்றும் கிருமிகளை நீக்கி பருக்கள் இல்லாமல் சருமத்தை சுத்தமாக வைத்திருக்கும்.வெள்ளை பற்கள்பற்களில் இருக்கும் கறைகள் போக மஞ்சள் கறைகள்நீங்க வேப்பிலையை பொடியாக்கி பற்களில் தேய்க்கலாம். இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் ஈறுகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் பிளேக் படிவுகளை அகற்றி பற்களின் மூலைகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. பற்களில் பல் இடுக்குகளில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றவும் செய்கிறது.

கூந்தலுக்கு வேப்பிலைபளபளப்பான முடிக்கு வேப்ப இலைகள் பயன்படுத்தும் போது அது பொடுகு நீக்கும். இது உச்சந்தலையை மீண்டும் நீரேற்றம் செய்யும். நுண்ணறையை தூண்டும். முடி இழைகளின் வளர்ச்சி மற்றும் பழுதை அகற்ற உதவும்.வேப்பம்பூ பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். குழந்தைகளுக்கு ரசத்தில் கலந்து கொடுக்கலாம். வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்க்கலாம். வேப்பம் பூ போல் வேப்ப இலைகளையும் எடுக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள விடியோவை பார்க்கவும் ..