பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது எதற்கு என்று தெரியுமா ..??

Health

காலில் கருப்பு கயிறு கட்டுவது எதற்குகருப்பு என்பது திருஷ்டிக்கு உரியது அதனால் இந்த கருப்பு கயிறை காலில் கட்டுவதால் திருஷ்டிகள் படாது என்றும் நம்மை சுற்றி இருக்கும் தீய சக்திகள் நெருங்காது என்றும் சொல்லப்படுகிறது.இவை எதற்காக காலில் மட்டும் கட்டப்படுகிறது என்றால் பாதத்தில் தான் ஒவ்வொரு அதிபதிகளும் குடிகொள்வார்கள் என்றும் சனி பகவான் கால் பகுதியில் இருப்பார்

என்றும் அவர் கருப்பு நிறத்தை உடையவர் என்பதால் கருப்பு கயிறு காலில் கட்டப்படுகிறது .உடலில் எந்த வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருப்பதற்காக கட்டப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குறிப்பாக வயதிற்கு வந்த பெண்களுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருப்பதற்காக கட்டப்படுகிறது.நேர்மறை ஆற்றல் உடலில் தங்கிக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்மறை ஆற்றல்கள் குடிகொள்ளக்கூடாது

என்பதற்காக இந்த கருப்பு கயிறு கட்டப்படுகிறது.கருப்பு கயிறு கட்டும் முறை:இந்த கருப்பு கயிறை பெண்கள் இடது காலில் கட்டவேண்டும் என்றும் ஆண்கள் வலது காலில் கட்ட வேண்டும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் கயிறை கட்டும்பொழுது முடிச்சுகள் போட்டு கட்ட வேண்டும். அதாவது ஒற்றைப்படை எண்களை கொண்டு 3,5,7,9 என்ற எண்களை கொண்டு

-Advertisement-

முடிச்சி போட்டு காலில் கட்ட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதனை நண்பகலில் 12 மணிக்கு கட்டுவது நல்லது.நவகிரகங்களின் ஆதிக்கம் படி ஒன்பது முடிச்சிகளுடன் காலில் கட்டுவது நல்லது.இந்த கயிறை ஞாயிற்று கிழமையில் கட்டுவது நல்லது என்றும் கூறுகிறார்கள். அப்படியில்லை என்றால் கோவில்களில் பூஜை செய்து வெள்ளி, செவ்வாய் கிழமையில் கட்ட வேண்டும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

கயிறுகளில் முடிச்சி போடும் பொழுது ஓம் என்ற மந்திரத்தை சொல்லவேண்டும். அப்படியில்லை என்றால் இஷ்ட தெய்வங்களின் பெயர்களை சொல்லி முடிச்சி போட வேண்டும்.இந்த கயிறை குறைந்தபட்சம் 48 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அதன் பிறகு வேற கயிறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.