உணவு சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா கூடாதா மருத்துவம் சொல்வதென்ன .. அதை பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் ..!!

Health

உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல என்று பலரும் நீண்ட நாட்களாகச் சொல்லக் கேட்டு இருப்போம். அப்படி தண்ணீர் அருந்துவதை பலரும் தவறாகவே கருதுகின்றனர். அதேபோல், சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதும் நல்ல பழக்கம் இல்லை என்றும் நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன அல்லது அது உண்மையா என்பதை நீங்கள் எப்போதாவது அறிய முயற்சி செய்துள்ளீர்களா, இல்லையெனில் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

​ஆயுர்வேதம் சொல்வது என்ன?ஆயுர்வேதத்தின் படி, எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நாம் தண்ணீர் குடிக்கலாம் என்று கூறப்படுகிறது. தண்ணீர் மற்றும் உணவை ஒன்றாக எடுத்துக் கொள்வது செரிமான அமைப்பை பாதிக்கும் என்று சிலரும், அது உண்மையல்ல என்றும் சிலர் நம்புகின்றனர்.

​சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் தண்ணீர் அருந்துவது சரியானதாசாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடுவதற்கு பின்பும் தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது செரிமான செயல்முறையை எளிதாக்கும் என்று கூறுகின்றனர்.ஏனெனில், தண்ணீர் மற்றும் பிற திரவங்கள் நீங்கள் உண்ணும் உணவை எளிதில் உடைக்க உதவுகின்றன.

-Advertisement-

இதனால் ஊட்டச்சத்துகள் சரியான முறையில் உறிஞ்சப்படும். அதுமட்டுமின்றி, சாப்பிட பின் தண்ணீர் அருந்துவது மலத்தை இலகுவாக்கி மலச்சிக்கலைத் தடுக்க உதவும்.சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும் போதும் தண்ணீர் குடிப்பது உங்களை முழுதாக உணர வைக்கும். இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிட மாட்டீர்கள். இதனால் உடல் எடையை சரியாகப் பராமரிக்க முடியும்.உணவுக்கு முன் தண்ணீர குடிப்பது உங்களின் பசியைக் குறைக்க உதவும் என்றாலும், இப்படி செய்வதன் மூலம்

உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும்.இதனால் உணவுகளை சரியாக செரிமானம் ஆகாமல், குளுக்கோஸ் நிறைந்த பகுதி கொழுப்பாக மாறி சேமிக்கப்படும்.இந்த செயல்முறை உடலில் இன்சுலின் அளவை உயர்த்தும். இதுமட்டுமின்றி, உங்களுக்கு நெஞ்செரிச்சல் போன்ற அமிலத்தன்மை பிரச்சனை உள்ளது எனில் இதனால் அந்தப் பிரச்சனை மேலும் மோசமடையலாம்.இதற்கு உணவின் போது எடுத்துக் கொள்ளும் தண்ணீர் காரணமாக இருக்கும்.