மரண வியாதி கூட சரியாக்கும் பூண்டு பற்றி மருத்துவர்கள் என்ன சொல்றாங்கனு நீங்களே பாருங்க ..!!

Health

பூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் என்று இதன் மருத்துவ தன்மை ஏராளம். ஒரு பூண்டு பல்லை உணவில் சேர்த்து வந்தாலே சாதாரண சளியில் இருந்து கொலஸ்ட்ரால் வரை சரி செய்யலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதன் வாசனை வேண்டும் என்றால் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.

ஆனால் இதன் பயனை அறிந்த பிறகு யாரும் இதை வேண்டாம் என்று ஒதுக்க மாட்டார்கள். இதை நம் உணவில் சேர்த்து வருவதால் நமது நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. வரலாற்று ரீதியாக பூண்டுகள் நோய்களைத் தடுக்கவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், காயங்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்று பூண்டில் உள்ள ஏராளமான நன்மைகள் குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் வாங்க தெரிஞ்சுக்கலாம்.



அதே நேரத்தில் பல ஆராய்ச்சிகளும் பூண்டிற்கு நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இருப்பதை ஒத்துக் கொள்கிறது. அதே மாதிரி மருத்துவர்களும் பல நோய்களுக்கு பூண்டு மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். வயதான பூண்டின் சாற்றை கொடுத்து ஆராய்ச்சி செய்த போது அவர்களின் நோயெதிப்பு திறன் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. 21 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான பெரியவர்களுக்கு 90 நாட்களுக்கு பூண்டுச் சாற்றை கொடுத்தனர். பிறகு அவர்களை ஆராய்ச்சி செய்த போது பூண்டுச்

-Advertisement-

சாற்றை பெற்றவர்களுக்கு சளி, காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்ற உடல் பாதிப்புகள் குறைவது தெரிய வந்துள்ளது.பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைப்பது, அத்துடன் தமனி விறைப்பு மற்றும் வீக்கத்திற்கான இரத்த புடைப்பு போன்றவற்றை போக்குகின்றன. இதய தமனி ஆபத்தை குறைக்க பூண்டுச் சாறு உதவுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வரும் ஆபத்துகள் குறைவு. எனவே அதிக கொழுப்புச்சத்து

உள்ளவர்கள் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால்கள் குறைய வாய்ப்புள்ளது. இது குறித்து மேற்கொண்ட புதிய ஆராய்ச்சியில் பூண்டு 8 சதவீதம் வரை கொழுப்பை குறைக்கும் ஆற்றல் இருப்பதாகவும், 50 வயதிற்குள் ஏற்படும் கரோனரி இதய பாதிப்பில் 38 சதவீதம் அபாயத்தை குறைப்பதாகவும் தெரிய வந்துள்ளது.உலகெங்கிலும், சுமார் 25% பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.

எனவே இது குறித்து மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளிலும் பூண்டிற்கு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பது தெரிய வந்தது. எனவே உயர் இரத்த அழுத்தம் உடையவர்களுக்கு பூண்டு மாத்திரைகள் சிறப்பான ஒன்றாக இருக்கும்.எலும்பு ஆரோக்கியம்பூண்டு கீல்வாதம் போன்ற மூட்டு பிரச்சினைக்கு தீர்வளிக்கிறது. வயதானவர்களை பாதிக்கும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. கூட்டு குருத்தெலும்பு மற்றும் எலும்பு முறிவைத் தடுக்க தாவரத்தின் இயற்கை சேர்மங்கள் உதவுகின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.