நீரிழிவு நோயாளிகளே இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் என்ன மாதிரி உணவுகள் என்று பாருங்க ..!!

Health

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின், உடலில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி இருக்காது. உயர் இரத்த சர்க்கரை அளவு தொடர்ந்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனைத் தடுக்கவும், உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் பயன்படும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று தான் ஆரோக்கியமான உணவுமுறை.

அந்த வகையில், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் சில உணவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.வெண்டைக்காய்வெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த உணவாகும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வெண்டைக்காய் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதால்,

வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லதாக அமையும். மேலும் கூடுதாலாக, மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் வெண்டைக்காய் உதவுகிறது.இலவங்கப்பட்டைஇலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் இன்சுலின் உற்பத்திக்கு மிக நல்லது. இலவங்கப்பட்டை சேர்த்த தேநீர் குடித்தால் உடலுக்கு நன்மை பயக்கும். இது ஏறக்குறைய, நமது உடலில் உள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின்

-Advertisement-

அளவைப் போலவே, இன்சிலினை உற்பத்தி செய்கிறது.பாகற்காய்சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் தான் மிகச் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கூறுகள், பாகற்காயில் இருப்பதால் கணையத்தைத் தூண்டி, இன்சுலின் சுரக்க வழிவகை செய்கிறது.வெந்தயம் வெந்தயம் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன், உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. வெந்தயத்தில் உள்ள ட்ரைகோனெல்லின்,

இரத்த சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிப்பது சிறந்த பயனைத் தரும்.மஞ்சள்வீட்டு சமையலறையில் முக்கிய பொருளான மஞ்சளில், அதிகளவு குர்குமின் உள்ளது. மஞ்சள் நேரடியாக, கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க பயன்படுகிறது.