காலையில அடிச்சுப் புடிச்சு ஆபீஸ்க்கு போய் சேர்ந்தவுடன், சிஸ்டடை ஆன் செய்ய கீழே குனியும்போதே பக்கத்தில் உள்ளவரைப் பார்த்து மூஞ்சியை கோணலாக வைத்துக் கொண்டு லேசாக சிரிப்பது. உடனே பக்கத்துல இருக்கிறவரு என்னன்னு கேட்கிறது தான் தாமதம் அதுக்குள்ள, நைட்டு நல்லாதான் படுத்து தூங்கினேன். ஆனாலும் ரொம்ப டயர்டாவே இருக்கு.
முதுகு வேற ரொம்ப வலிக்குத்துங்க என்று தினமும் புலம்புவர்கள் தான் அதிகம்.எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் கடும் சோர்வும் முதுகுவலியும் உண்டாகிறது. அதற்குக் காரணம் தான் என்ன?நன்றாகத் தூங்கி எழுந்த பின்பு கடுமையான இடுப்பு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு என்ன காரணம் தெரியுமா?
நாம் தூங்குகின்ற முறைதான் அதற்கு மிக முக்கியக் காரணம். நாம் சரியாகத் தூங்காமல் இருப்பதும் சரியான இடத்தில் தலையயணையை வைத்துத் தூங்காமல் இருப்பதும் தான் இதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. அதனால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தூங்குகின்ற முறையும் தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் மிக மிக முக்கியம்
கழுத்து மற்றும் முதுகுவலி உங்களுடைய தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புறத்தில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு புறமாக அல்லது நேராக மல்லாக்க படுத்திருந்தால் வலி குறையும். இப்படி படுக்கிற பொழுது, முதுகுத்தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் செல்லும். அப்படி செல்லுகின்ற பொழுது, உங்களுடைய கழுத்துப் பகுதி கொஞ்சம்
தளர்வடையும். அதனால் வலி குறையவும் ஆரம்பிக்கும்.உட்காரும் நிலை நீங்கள் உட்காருகின்ற நிலையை மாற்றினால் மட்டும் தான் இதுபோன்ற வலிகளைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்க முடியும்.