நாய் உங்களை கடித்துவிட்டால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது ..??

Health

மனிதனின் உற்ற நண்பனாக விளங்கும் ஒரு விலங்கு நாய். ஆனால் சில சமயங்களில் நாய்கள் மனிதனுக்கு ஒரு தொந்தரவாகவும் உள்ளன. குறிப்பாக அவை மனிதனை கடிப்பதால் பலவேறு பாதிப்புகள் மனிதனுக்கு உருவாகிறது. நாய் மனிதனை கடித்துவிட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். சிகிச்சை பெற்று காயம் முற்றிலும் குணமாகும்வரை மருத்துவரின் ஆலோசனை

பெறுவது மிகவும் முக்கியம். மற்றபடி, நாய்க் கடியில் இருந்து உங்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பயன் பெறுங்கள். ஆனால் எந்த அளவிற்கு இதன் விசுவாசம் உள்ளதோ, அதே அளவிற்கு, தீங்கும் விளைவிக்கிறது. தெரு நாய்களுடன் சண்டையிடும்போது அல்லது ஒருவரை துரத்திக் கொண்டு

ஓடும் போது, அவற்றிடம் மாட்டிக் கொள்ளும் ஒருவரின் நிலைமை, மரணத்தை விட கொடுமையானது. நாய்களிடம் அகப்பட்டால் அதன் பற்களும் நகங்களும் மனிதனை பதம் பார்த்து விடும். இத்தகைய பயங்கரமான நாய் கடியில் இருந்து நிவாரணம் பெற சில எளிய மற்றும் விரைவான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிப் பற்றி தெரிந்து கொள்வதால் நாய் கடி உண்டானவுடன் உடனடி முதலுதவியாக

-Advertisement-

இதனை மேற்கொள்வதால் தீவிர அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.மருத்துவ உதவி கண்ணுக்கு தெரியாத காயங்கள் இருந்தால், முதல் வேலையாக தண்ணீரில் காயத்தை கழுவுங்கள். தண்ணீருக்குள் காயம் பட்ட இடத்தை சில நிமிடங்கள் தொடர்ந்து வைத்திருங்கள். அல்லது அல்கஹாலை அந்த இடத்தில் தடவுங்கள். ஹைட்ரஜன் பெராக்சைடு இருந்தால் அதனையும் வலி உள்ள இடத்தில தடவலாம்.

காயம் அழுத்தமாக இருந்தால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் செல்லலாம். தாமதித்தால் இன்னும் பல கடுமையான நோய் தாக்கம் அல்லது நீடித்த பிரச்சனை உண்டாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்.