தினமும் மிளகு சாப்பிடுவதால் நடக்கும் பல ஆச்சரிய நன்மைகள் ..!!

Health

அற்புதமான ஒரு விளைபொருள் தான் மிளகு! மிளகு சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை நட்சத்திர வீரர் உட்பட.சிகரெட், பீடி, புகையிலை போன்ற போதை பொருட்கள் உடலுக்கு தீமை விளைவிப்பவையாகும். இப்பழக்கம் கொண்டவர்கள் இவற்றை பயன்படுத்தும் நேரத்தில் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று வந்தால் அப்பழக்கத்திலிருந்து விடுபடலாம்.வாதம் தன்மை அதிகம் கொண்ட உணவுகளை உண்பதால், வயிற்றில் வாயுவின் தன்மை அதிகம் ஆகி சிலருக்கு

வாயுக்கோளாறுகள் ஏற்படுகின்றது. மிளகை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு வாயு கோளாறுகள் நீங்கும்.நார்ச்சத்தில்லாத உணவுகளையும், மாமிச உணவுகளை அதிகளவில் உண்பவர்களுக்கும் வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இவர்கள் உண்ணும் உணவில் மிளகு அவ்வப்போது சேர்த்து உண்ண புற்று நோய் ஏற்படுவதை தடுக்கும்.

நாற்பது வயதை நெருங்குபவர்கள் எல்லோருக்கும் ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுவது இயற்கையானதே. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து கொள்ள தினமும் சில மிளகுகளை மென்று தின்பது சிறந்தது.