புற்றுநோய் என்பதே தீவிரமான நோய்தான். அதிலும் நுரையீரல் புற்றுநோய் என்பது ஒட்டுமொத்த புற்றுநோயில் 19 சதவீதம் இது மக்களை தாக்குவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதுவும் நம்முடைய சில வாழ்க்கை முறைக் காரணங்களாலும் உண்டாகிறது. அந்த வகையில் நுரையீரல் புற்றுநோயின் 5 முக்கிய அறிகுறிகள் என்ன என்பதைக் காணலாம்.
தொடர்சியான இருமல் பொதுவாக சளி இருந்தாலே இருமல் இருக்கும். ஆனால் இது சற்று வித்தியாசமானது. இந்த இருமல் 10 நாட்களுக்கு மேல் நீடிக்கிறது எனில் நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கலாம். அடிக்கடி இப்படி இருமலால் அவஸ்தைப்படுகிறீர்கள் எனில் உடனே மருத்துவரை அனுகவும். தொடர்ச்சியான இருமல் தொற்றுகளை உள்ளிழுத்து நுரையீரல் நேரடியாக பாதிக்கப்படும்.
மூச்சு விடுவதில் சிரமம் நுரையீரலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகரித்தால் அவை மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் காற்று செல்லும் பாதை சீராக இல்லாததால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். இதனால் மற்ற நுரையீரல்களுக்கும் ஆக்ஸிஜன் செல்லாது. மூச்சை நன்கு இழுத்துவிடுவதற்கே மிகவும் சிரப்படுவார்கள்.
பேச்சில் மாற்றம் நுரையீரல் புற்றுநோய் ஒருவரின் குரல் வளத்தையே பாதிக்கும். குரலை கரடு முரடாகவோ அல்லது கேட்கமுடியாத படி மாற்றுவிடும். அப்படி உங்கள் குரலிலும் மாற்றத்தை உணர்ந்தால் கவனமாக இருங்கள். உடனே மருத்துவரை அனுகி இதுகுறித்து கலந்து ஆலோசியுங்கள். அதேபோல் நுரையீரல் புற்றுநோய் மட்டும்தான் குரலை மாற்றும் என்பதல்ல. எனவே இதை நினைத்து நீங்களே முடிவு செய்ய வேண்டாம்.
உடல் வலி உடல் வலி என்பது பொதுவான காரணிதான். இருப்பினும் தொடர்ச்சியாக இந்த வலியை அனுபவிக்கிறீர்கள். இது உங்களை அதிக தொந்தரவாக இருக்கிறது எனில் கவனமாக இருங்கள். குறிப்பாக நெஞ்சில் பாரமாக இருப்பது, தோள்பட்டை வலி, முதுகுவலி இருந்தால் சற்று அலார்டாக இருங்கள். அதைத்தொடர்ந்து உடல் நலத்திலும் பிரச்சனைகளை சந்தித்தால் கவனமாக இருங்கள்.
உடல் எடை குறைதல் மற்றும் சோர்வு எதிர்பாராத விதமாக நீங்கள் உடல் எடை குறைந்துள்ளீர்கள். அதுவும் எந்த டயட், உடற்பயிற்சியும் இல்லாமல் திடீரென குறைந்துகொண்டே போகிறது எனில் இதை சாதாரணமாக கருதிவிடாதீர்கள். அதேபோல் பசியின்மை, உடல் சோர்வும் புற்றுநோயின் முக்கிய அறிகுறி. உடல் எடை குறைய பசியின்மையும் காரணமாக இருக்கும். எனவே இதுபோன்ற மாற்றங்களை அலட்சியமாக விடாதீர்கள்.