குழந்தைகளுக்கு முதல் 6 மாதத்துக்கான சிறந்த உணவு தாய்ப் பால்தான். முதல் தடுப்பு மருந்தும்கூட அதுதான். அதில் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன. விலங் கினங்களின் பாலில் இந்தச் சத்துகள் குறைவாக இருக்கும். தாய்ப் பாலில் முக்கிய ஊட்டச்சத்தான வே புரோட்டீன் அதிகமாக இருக்கும். மாட்டுப் பாலில் கேசீன் என்ற புரதம்தான் அதிகமாக இருக்கும்.
மாடு, கழுதைகள் போன்ற விலங்குகளின் உடல் பெரியது. அதற்கு அதிகமான புரதம், கொழுப்பு தேவை. அதற் கேற்ப அதிக அளவு சத்துகள் அந்த வகைப் பாலில் இருக்கும். அதே போல், அதன் புரத அமைப்புகள் வேறு மாதிரியாக இருக்கும். மூளை வளர்ச்சிக்குத் தேவையான பொருட்கள்,தாய்ப் பாலில் அதிகமாக இருக்கும். மேலும் டாரேன், கிளைசின், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்களும் தாய்ப்பாலில் உள்ளன.
தாய்ப் பாலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்திக்கு நிறைய பொருட்கள் உள்ளன. முதலில் குடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். விலங்குகளின் பாலை குழந்தைகளுக்குக் கொடுத் தால் குடல் மூலம், நிறைய பாக்டீரியா உருவாகி தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆனால், தாய்ப் பாலில் உள்ள லைசோசைம் போன்ற என்சைம்கள், சில வகைப் புரதங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்துக்கும் உதவும்.
ஆகையால் கழுதைப் பால் கழுதைக் குட்டிக்கு மட்டுமே. மனிதர்களுக்கு அல்ல.விலங்குகளுக்கு வரக்கூடிய நோய்கள் வேறு. அந்த நோய் களை தடுக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்திகளே அந்தப் பாலில் கிடைக்கும். அதனால்தான் உலகின் அனைத்துக் குழந்தைகள் நல அமைப்புகளும் முதல் 6 மாதத்துக்கு தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன.