ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் வேலை, எதிர்காலம், திருமணம் என்று ஆர்வமாக இருந்து வருகிறார்கள். ஆனால், அப்படியிருக்கும் நேரத்தில் உடலின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படுவதில்லை. அந்த தருணத்தில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த
சில நலல் பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.தினந்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், காய்கறிகள் மற்றும் பழங்களையும் சாப்பிட்டு வந்தால் உடல் ரீதியாக ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை தவிர்க்கலாம்.
கிரீன் டீ.கிரீன் டீயின் அதிகளவில் ஆன்டி – ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கும். இதனை 20 வயதிலிருந்தே எடுத்து வந்தால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். கிரீன் டீயின் சுவைக்காக சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து கொள்ளலாம்.
உடற்பயிற்சி.தினமும் அதிகாலை எழுந்தவுடன் 20 முதல் 40 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். அந்த 20 நிமிடம் நடைபயிற்சி அல்லது ஓட்டம் போன்றவற்றில் ஈடுபடுதல் நல்லது. இதன் காரணமாக உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடலின் பருமன் பிரச்சனைகளும் தீரும்.
யோகாமன அழுத்தத்தில் இருந்து விடுபட தினமும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்து வந்தால் இளமையாகவே இருக்கலாம்.
சரும பராமரிப்புசருமத்தின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால், ஆரோக்கியமான சருமம் நல்ல புத்துணர்வை தருவதால், சருமத்தின் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும். ஒவ்வொரு பருவத்தின் போதும் சரும மாற்றம் ஏற்படும். இதனால் 20 வயதிலிருந்தே சருமத்தை சுத்தம் செய்தல், இறந்த செல்களை நீக்குதல் போன்றவற்றை தவறாலம் செய்ய வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
டீ மற்றும் காபி பாதிப்பை ஏற்படுத்தும்கால்சியம் அதிகமுள்ள பால் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது எலும்பு மற்றும் உடலை வலுமையாக்கும். அதேசமயம் டீ மற்றும் காபி போன்றவற்றில் காஃபைன் அதிகம் நிறைந்திருப்பதால், அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதிகளவில் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.