வாழைப்பழம் சாப்பிடும்போது உடலுக்கு உடனடி எனர்ஜி கொடுக்கும். வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க முடியும்.அதோடு சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் எண்ணத்தைத் தடுக்க உதவும். இத்தனை ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் இருந்தாலும் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. குறிப்பாக சில உடல்நல பாதிப்புகள் இருப்பவர்கள் கட்டாயம் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும். அப்படி யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என்பது
ஏற்கனவே பல் சொத்தை பிரச்சினை இருப்பவர்கள் கட்டாயம் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும். அது பற்சொத்தையை அதிகரிக்கச் செய்வதோடு சொத்தை பற்களுக்குள் புழுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழம் என்றாலும்கூட அதை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாழைப்பழங்கள் எடுத்துக் கொள்வதால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் வாழைப்பழம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபனின் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.அதனால் இது அதிகமாக தூக்கத்தை தூண்டும். ஆகையால் பகல் நேரங்களில் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.இரவில் ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கேற்றபடி இரவு உணவில் சில கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.வாழைப்பழத்தில் பொட்டாசியமும் நார்ச்சத்துக்களும் மிக அதிக அளவில் இருக்கின்றன. இது வாயுத் தொல்லையை ஏற்படுத்துவதோடு வயிறு எப்போதும் உப்பசமாக
இருப்பது போல தோன்றும். அதனால் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் வாழைப்பழம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.ஏற்கனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.வாழைப்பழத்தில் அதிக அளவிலான கலோரிகள் இருக்கின்றன. அதோடு அதிகப்படியான கார்பேஹைட்ரேட்டும் ஃபிரக்டோசும் உள்ள பழம் என்றால் அது வாழைப்பழம் தான். அதனால் அதிகமாக வாழைப்பழம் எடுத்துக் கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். நீரிழிவை அதிகரிக்கும்.
ஏற்கனவே நீரிழிவு பிரச்சினை இருப்பவர்களும் அதன் முன் அறிகுறிகள் மற்றும் ஆபத்து இருப்பவர்களும் வாழைப்பழத்தைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.வாழைப்பழத்தில் அதிகப்படியான பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. வாழைப்பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் இது ஒற்றைத் தலைவலியை தூண்டச் செய்யும்.சிலர் அடிக்கடி ஒற்றைத் தலைவலி பிரச்சினையால் அவதிப்படுவார்கள். அவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது இன்னும் தலைவலியை அதிகப்படுத்தி விடும்.
வாழைப்பழத்தில் வைட்டமின்கள், பொட்டாசியம், மினரல்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கின்றன. இருந்தாலும் வாழைப்பழத்தில் கலோரிகள் அளவு மிக மிக அதிகம்.ஒரு வாழைப்பழத்தில் மட்டும் கிட்டதட்ட 60 கலோரிக்கும் மேல் இருக்கிறது. அதனால் அதிகமாக வாழைப்பழங்கள் எடுத்துக் கொள்ளும்போது உடல் எடையும் அதிகரிக்கும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் உடல் பருமன் உள்ளவர்களும் வாழை்பழம் உட்கொள்வதைத் தவிர்ப்பது மிக முக்கியம்.
பொதுவாக வாழை்பழம் மலச்சிக்கல் ஏற்படடாமல் தடுக்கும் என்று சொல்வார்கள். இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுவதால் தினமும் இரவில் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு தூங்கும் பழக்கம் உயைவர்களை பார்த்திருப்போம்.ஆனால் வாழைப்பழம் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அதில் அதிகப்படியாக நார்ச்சத்துக்கள் இருப்பதால் அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும்.அப்படி எடுக்கும்போது அந்த கலோரிகளை சமன்படுத்துவதற்கு மற்ற தேவையற்ற அதிக கலோரி உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.