ஒரு நாளில் எத்தனை கப் தேநீர் குடிக்கலாம் ?? தேநீர் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ..??

Health

சர்வதேச தேநீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வை நிலைநிறுத்துவதற்கான வழிகளை ஊக்குவிக்கிறது.நம்மில் பலரும், டீ அடிக்ட்டாக இருக்க வாய்ப்புள்ளது. ‘நிறைய டீ குடிக்கிறேன்பா. ஓவர் சுகர். கொஞ்சமாச்சும் குறைக்கணும்’ என நினைத்து பலரும் டீ-யை விட எண்ணுவோம்.

ஆனாலும் முடியலையே என நொந்துக்கொள்வோம். ‘சரி டீயை விட வேண்டாம், கொஞ்சம் குறைச்சுக்கலாம்’ என்றெண்ணி, டீயை குறைக்க நினைப்போம். ஆனால் இறுதியில் எத்தனை டீ குடிக்கலாம் என்பதே தெரியாததால் ‘என்னமோ போங்கப்பா’ என்று பழையபடி டீ குடிக்க ஆரம்பித்துவிடுவோம்!ஒரு நாளைக்கு எத்தனை கப் தேநீர் குடிக்கலாம்?நல்ல ஆரோக்கியத்திற்கு

ஒரு நாளைக்கு 1-2 கப் தேநீர் பரிந்துரைக்கப்படுகிறது.தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன – ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் மாசுபாட்டிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.தேநீரில் காபியை விட குறைவான காஃபின் உள்ளது – மூலிகை தேநீர் கலவைகளில் காஃபின் இல்லை மற்றும் பாரம்பரிய தேநீர் கலவைகளில் பொதுவாக

-Advertisement-

காபியில் காணப்படும் காஃபினை விட 50 சதவீதத்திற்கும் குறைவாகவே காஃபின் உள்ளது.மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தேநீர் குறைக்கலாம் – தினமும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கப் கிரீன் டீ குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால், எல்டிஎல் அளவு குறைகிறது.

தேநீர் எடை இழப்புக்கு உதவும் – எடை இழப்புக்கு முயல்வோருக்கு கிரீன் டீ உதவும்.தேநீர் உங்கள் எலும்புகளைப் பாதுகாக்க உதவும் – கிரீன் டீ எலும்பு இழப்பைத் தடுக்கும் என்பதைக் காட்டுகிறது.தேநீர் உங்கள் புன்னகையை பிரகாசமாக வைத்திருக்கும் – தேநீர் வாயில் உள்ள pH ஐ மாற்றுகிறது. இதன்மூலம் துர்நாற்றம் தவிர்க்கப்படுவதால், இன்னும் பிரகாசமாக நம்மால் சிரிக்கமுடியும்!

தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் – தேநீர் நோயெதிர்ப்பு செல்களை சீர்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் அவை நம்மை நோயிலிருந்தும் காக்க உதவுகிறது.தேநீர் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் – புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம் இருப்பவர்கள், கிரீன் டீ மூலம் புற்றுநோய் வராமல் எதிர்த்துப் போராட முடியும்.