சில நேரங்களில் சுவைக்காகவும் சில நேரங்களில் பசிக்காகவும் தினமும் உணவு சாப்பிட்டு வருகிறோம். இந்த வெண்பூசணியில் என்னென்ன பலன்கள் இருக்கிறது, இந்த ஜூஸ் குடிப்பதனால் உடம்பில் என்ன நிகழும், இந்த ஜூஸை எவ்வாறு தயாரிப்பது, எப்போதெல்லாம் குடித்தால் நன்மைகள், யாரெல்லாம் இதைக் குடிக்க கூடாது என்று பல தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்த வெண்பூசணி கண்களுக்கு நல்லது
இப்போது இருக்கும் காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மொபைல் போனை பார்க்கின்றனர் இந்த மொபைல் போனினால் கண்களின் விழித்திரை பாதிக்கப்படுகிறது ஆனால் இந்த வெண்பூசணி ஜூஸை குடித்து வருவதால் விழித்திரை பாதிப்பில் இருந்து தடுக்க முடியும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்லது
வெண்பூசணியின் விதைகளை இதனுடன் சேர்த்து ஜூஸாக செய்து குடிக்கும் போது நம்முடைய இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக இருக்கச் செய்யும்.
மூளையின் சுறுசுறுப்பிற்கு உதவும்
தினமும் காலையில் ஒரு டம்ளர் வெண்பூசணி ஜூஸ் குடித்து வர மூளை சுறுசுறுப்பாக்கி ஞாபக சக்தியை அதிகரிக்கும். இதை மாணவர்களுக்கு தினமும் கொடுத்து வர படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மன அழுத்தத்திற்கு நல்லது
தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால், நாள் முழுவதும் மனநிலை சிறப்பாக இருக்கும். ஏனெனில் வெள்ளைப்பூசணியில் உள்ள சத்துக்களானது நரம்புகள் மற்றும் மூளையை அமைதியடையச் செய்து, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும்.
உடல் சூட்டிற்கு நல்லது
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி ஜூஸைக் குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
உடல் எடையை குறைக்க உதவும்
நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், வெள்ளை பூசணி ஜூஸை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
சிறுநீரகத்துக்கு நல்லது
நமது சிறுநீரக மண்டலத்தில் எரிச்சல், சூடு, புண்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம் இவற்றையெல்லாம் சரி செய்யக்கூடிய சக்தி இந்த வெண்பூசணி ஜூஸ் இருக்கு உள்ளது. மேலும் சிறுநீரக கோளாறுகளை சரி செய்யவும் இந்த வெண்பூசணி ஜூஸ் குடிக்க வரலாம் மற்றும் இது சிறுநீரக கற்களையும் கரைக்க உதவும்.
மூல நோய்க்கு நல்லது
மேலே கூறப்பட்டது போல் வெண்பூசணியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கல் மூலநோய் போன்ற நோய்களுக்கு மிகச் சிறந்த தீர்வாகும்.
எனவே தினமும் வெண்பூசணியை நாம் சாப்பிட்டு வர உடம்பில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நோய்களையும் தீர்த்து ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை நிம்மதியாக வாழ வழிவகிக்கிறது.