ABC ஜூஸ் என்பது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்றையும் சம அளவில் அரைத்து அதன் சாறை பருகுவதாகும். இது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருவதால் பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை குடித்து வருகின்றனர். குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் இதை பருகுகின்றனர். அதோடு காலையில் டீ , காஃபிக்கு பதிலாகவும் இதை
ஒரு கிளாஸ் தினமும் குடிக்கின்றனர். அப்படி என்னென்ன நன்மைகளை இவை தருகின்றன என்று பார்க்கலாம்.ABC ஜூஸ் ஆன்டி ஆக்ஸிடன்ட் களை நிறைவாகக் கொண்டுள்ளது. எனவே நோய் இல்லாத வாழ்வுக்கு உதவுகிறது.ABC ஜூஸில் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகளான A, B1, B2, B3, B6, B9 C , E, K , இரும்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம்,
கால்சியம் , பாஸ்பரஸ் செலினியம் என பல சத்துக்களை அளிக்கிறது.இந்த ஜூஸ் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இயங்குகின்றன.சருமத்தை பராமரிப்பிலும்
இது முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் தொடர்ந்து குடித்து வர உங்கள் மேனி பளபளப்பை நீங்களே கண்கூட காண முடியும்.இது டீடாக்ஸ் பானமாகவும் இருப்பதால் கொழுப்பு சேர விடாமல் உடல் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை பராமரிப்பிலும் சிறப்பாக பங்காற்றுகிறது.