கொழுப்பைக் குறைக்க, நீரிழிவை கட்டுக்குள் வைக்க, வாயுத் தொல்லைகளை குறைக்க, தொற்று நோய்களை குணப்படுத்த, சக்தி கொடுக்க, குமட்டலைத் தடுக்க, உடல் எடையைக் கூட்ட, தூக்கமின்மையை போக்க, ஆஸ்துமாவைக் குறைக்க, பொடுகை நீக்க தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என எல்லாவற்றுக்கும் தேனை நாம் பயன்படுத்தலாம். தேன் அதன் இனிப்பான சுவை
தவிர நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான எண்ணற்ற சத்துகளும் இயற்கையாகவே கொண்டுள்ளது. தேனில் இவ்வளவு பலன்களா? வியக்க வைக்கும் உண்மை என்னவென்றால் இனிப்பான ருசியோடு, இருமலை குணமாக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் எடையையும் கூட்டும் சக்தி தேனுக்கு உண்டு.மனிதன் 8000 வருடங்களுக்கு முன் தேனைக் கண்டு பிடித்ததோடு
நில்லாமல் அதை உபயோகப்படுத்துவதையும் ஆரம்பித்து இன்று வரை அதை நிறுத்த வில்லை. தேன் கிரேக்கத்திலும், எகிப்திலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஆயுர்வேதத்திலும், சீன பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய பொருளாக சேர்க்கப்பட்டது. இந்த அற்புதக் கலவை இயற்கையான குணப்படுத்தும் தன்மையை மேலும் அற்புதமாக்கியது.இதிலுள்ள ரகசியக் கூட்டுப் பொருள் வீட்டு வைத்தியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. தேனை அப்படியே சுவைக்கலாம்
அல்லது மசாலாக்கள் மற்றும் தண்ணீரோடு கலந்து அதன் அனைத்துப் பயன்களையும் பெறலாம்.நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் அறிவுரையின் படியே உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உணவுகளில் அதிக கட்டுப்பாடும் அவசியம்.குறிப்பாக வெள்ளை சர்க்கரையை நீரிழிவு நோயாளிகள் மட்டுமின்றி, சாதாரண நபர்களும் சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் நீரிழிவு நோயாளிகளின் உடல்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுமாம்.