உங்களை முகத்தை மிகவும் ஜொலிஜொலிக்க செய்யும் அழகு குறிப்பு டிப்ஸ் இதோ ..!!

Health

அழகு குறிப்பு: உடல் முழுவதும் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பலர் என்ன தான் சருமத்தை பாதுகாத்தாலும், ஒரு சில நேரங்கள் வரை தான் சருமம் ஜொலிஜொலிப்பாக இருக்கும். இருப்பினும் காலை முதல் மாலை வரை சருமம் ஜொலிஜொலிப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமா?

அப்போ இந்த அழகு குறிப்பு டிப்ஸ் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த அழகு குறிப்பு டிப்ஸ் இரவு முழுவதும் சருமத்தில் பேக்காக போட்டு, மறுநாள் முகத்தை குளிர்ந்த நீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.அதேபோல், தினமும் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால். சருமம் புத்துணர்ச்சி அடைந்து, காலை முதல் மாலை வரை ஜொலிஜொலிப்பாக காணப்படும்.

அழகு குறிப்பு டிப்ஸ் – பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெயில் அதிகளவு ஈரப்பதம் உள்ளது என்பதால், இரவு தூங்குவதற்கு முன், இந்த பாதாம் எண்ணெயை சருமத்தில் தடவி, ஐந்து நிமிடங்கள் வரை முகத்தை நன்றாக மசாஜ் செய்து.இரவு முழுவது வைத்திருந்து மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும்.

-Advertisement-

அழகு குறிப்பு டிப்ஸ் – வெள்ளரிக்காய்:

இரவு தூங்குவதற்கு முன் வெள்ளரிக்காயை நன்றாக மசித்து முகத்தில் பேக்காக போட்டு, மறுநாள் காலை சருமத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சி அடைந்தும். அன்று காலை முதல் மாலை வரை முகம் ஜொலிஜொலித்து காணப்படும்