காலை நேர உணவை எக்காரணத்தைக் கொண்டும் தவறவிடக் கூடாது என நம் பெற்றோர்கள் நமக்கு சொல்வதை கேட்டிருப்போம். மருத்துவர்களும் அதை தான் சொல்வார்கள்.எவ்வளவு வேலை இருந்தாலும் காலை சிற்றுண்டியை மட்டும் தவிர்க்கக் கூடாது என சொல்வார்கள்.
அதே போன்று ஒருசில உணவுப் பொருட்களையும் காலை நேரத்தில் தவிர்ப்பது மிக மிக நல்லது. அந்த வகையில் எந்த உணவுகளை காலை நேரத்தில் மறந்தும் சாப்பிடவே கூடாது என்பதை பார்க்கலாம்.குறிப்பாக சிட்ரஸ் பழங்கள்; சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிக அளவு இருந்தாலும் கூட வெறும் வயிற்றில் அதனை சாப்பிட கூடாது. இதனால் அல்சர், வாயு பிரச்சனை,
வயிற்றுக் கோளாறு ஏற்படும். ஆனால் காலை உணவு எடுத்துக் கொண்டபின் இதனை சாப்பிடலாம்.அதிக மசாலாக்கள், காரசாரமான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு பொருட்களை எடுத்துக் கொண்டால் நெஞ்சு எரிச்சல் வயிறு தொந்தரவு கண்டிப்பாக ஏற்படும். இதற்கு பதிலாக காலை நேரத்தில் ஆப்பம் , தோசை, இட்லி என மிருதுவான சில உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வது மிக சிறந்தது.
மேலும் தகவல்கள் அறிய கீழே உள்ள விடியோவை நீங்களே பாருங்க ..