ஒரு மாதத்திற்கு அரிசி சாதம் உட்கொள்ளாமல் இருந்தால் என்னாகும் ?? அவசியம் நீங்கள் தெரிஞ்சுக்கோங்க..!!

Health

ஆசியாவில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அரிசி உணவை சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும் என்ற அளவிற்கு அரிசி நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அதிக அளவு அரிசி உணவை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது தானா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்!

அரிசியில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன மேலும் ஸ்டார்ச் மற்றும் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும் அதில் நிறைந்துள்ளன. அதே சமயத்தில் அரிசி உணவை அதிகம் உட்கொள்ளும் போது அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து உடல் எடை கூடுவதற்கு வழிவகுக்கும்.ஆனால் அதற்காக அரிசி உணவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட வேண்டும் என்று

கூறி விட முடியாது. உதாரணத்திற்கு ஒரு மாதத்திற்கு நீங்கள் அரிசி உணவை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.ஒரு மாதம் தொடர்ந்து அரிசி உணவை நாம் தவிர்த்தால் உடலில் கலோரிகள் கணிசமாக குறைந்து எடை குறைய வாய்ப்புள்ளது.நாம் கார்போஹைட்ரேட் உண்ணாத காரணத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூட கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

-Advertisement-

ஆனால் இந்த எடை குறைப்பு முயற்சியில் அரிசி தவிர மற்ற தானியங்களையும் அல்லது அதே அளவிலான கலோரிகளை கொடுக்கும் மற்ற கார்போஹைட்ரேட் உணவுகளையும் நாம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அரிசி உணவை நாம் தவிர்த்துவிட்டால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு நிச்சயம் சமநிலையில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.