கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.சோற்றுக் கற்றாழை ஜெல்லை முகத்தில் தொடர்ந்து பூசுவதன் மூலம் இளம் வயதில் உண்டாகும்
தோல் சுருக்கம் மறைந்து அழகு கூடும். அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், முகத்தில் பூசி வந்தால் கருமை, கரும் புள்ளி ஏற்படாமல் காக்கும்.கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.கற்றாழையைத் தினமும் எடுத்துக்கொண்டால் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் ஸ்லிம் ஆகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.மூட்டு வலி, கழுத்து வலியின்போது, வலி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையை நீளவாக்கில் வெட்டி, சூடு செய்து, பற்றுப் போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.