டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் கொசுக்களால் ஏற்படும் நோயாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் கணிசமான மக்கள் பாதிப்புக்கு ஆளாகிவிடுகின்றனர். மோசமான நிலையில் டெங்கு உயிரிழப்பையும் ஏற்படுத்தும். டெங்குவின் ஆபத்துகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு
ஆண்டும் மே 16ஆம் தேதி தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.சமீபத்திய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் குழு மக்களை எச்சரித்தது. இந்தியாவில் பரவும் டெங்கு வைரஸில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த மாற்றங்கள் கடுமையான நோயை உருவாகும் அபாயத்தை சுட்டிக்காட்டுகின்றன. வைரஸில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன.
இது முன்பு நினைத்ததை விட தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட ஏடிஸ் வகை கொசு நம்மை கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவுகிறது. இந்த கொசுக்கள் ஜிகா, சிக்குன்குனியா, பிற வைரஸ்களையும் பரப்புகின்றன. டெங்கு கொசுக்கள் பகலில் அதிக சுறுசுறுப்பாக இருக்கும்.
அறிகுறிகள்
ஏடிஸ் கொசு கடித்தால் தீவிர காய்ச்சல், வாந்தி-வயிற்றுப்போக்கு, உடல், தசை வலியும், உடலுக்குள் இரத்தப்போக்கு காரணமாக மலத்தில் ரத்தம் வெளியேறுதல் ஆகிய அறிகுறிகள் காணப்படும்.
டெங்கு காய்ச்சலில் மீள உணவுகள்
ஆன்டி இம்பிளமேட்டரி, பூஞ்ஜை எதிர்ப்பு பண்புகள் அதிகம் கொண்ட மசாலா பொருள்களான மிளகு, ஏலக்காய், லவங்கப்பட்டை, மஞ்சள், இஞ்சி போன்றவை உண்ணலாம். இவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கும். ஓட்ஸ், பப்பாளி இலை சாறு, மாதுளை, இளநீர், யோகர்ட், ப்ராக்கோலி, ஹெர்பல் டீ (புதினா, ஏலக்காய், லவங்கப்பட்டை, இஞ்சி) போன்றவை டெங்கு பாதித்தவர்கள் உண்ணக் கூடியது.