உயர் இரத்த அழுத்த பிரச்சினைக்கு இயற்கையாகவே குறைப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன .. இதோ ..!!

Health

உயர் இரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இதை குறைப்பதற்கு மக்கள் பல்வேறு வகையான மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர், ஆனால் இயற்கையான வழிகளிலேயே நம்மால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். அதற்கான சில எளிய முறைகளை இப்போது பார்க்கலாம்.

இந்த அளவிற்கு அதிகமான அளவில் உங்களுக்கு இரத்த அழுத்தம் இருந்தால் அது உயர் ரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தமானது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே இதை இயற்கையாகவே எப்படி குறைப்பது என இப்போது பார்க்கலாம்.

நமது உடலில் இரத்த அழுத்த அளவானது நடுநிலையான அளவில் இருக்க வேண்டும். மாறாக அதிகமாக இருந்தால் அது உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது. இரண்டு மதிப்புகளை கொண்டு இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதா? என்பது கண்டறியப்படுகிறது. அவை சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் ஆகும். பெரியவர்களில் சிஸ்டாலிக் மதிப்பு 140 மி.மீ.ஹெச்.ஜி

-Advertisement-

மற்றும் டயஸ்டாலிக் 90 மி.மீ.ஹெச்.ஜி அளவிற்கு குறைவாக இருந்தால் அவர்கள் சரியான இரத்த அழுத்தத்தில் இருக்கின்றனர் என பொருளாகும்.உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வது உடம்பிற்கு சிறந்ததாக இருக்கும். ரத்த அழுத்திற்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும்.

தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது அவசியமானது. ஏனெனின் பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்த பிரச்சினையை தடுக்கின்றது.செலரி” எனப்படும் கீரையின் தண்டு பகுதியை சாப்பிடுவது நல்லது. அத்துடன் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை சாப்பிடலாம்.மருத்துவரின் பரிந்துரையிற்கமைய தினமும் மாத்திரைகளை நேரத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும்.