உடலில் இரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள் ..!!

Health

நம்முடைய இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ளே ஒரு வகையான கூறே ஹீமோகுளோபின் எனப்படுகிறது. இதன் வேலை நுரையீரலுக்குள் நாம் உள்ளிழுக்கும் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு சென்று அதன்மூலம் உடலின் எல்லா பகுதிகளிலும் ஏற்படும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவி செய்வதாகும்.

சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும். பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதுரத்த சிகப்பணுக்களின் எண்ணிக்கை குறைவது, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஹீமோகுளோபின் அளவு குறைய முக்கிய காரணமாகின்றன.

அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பது, பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது, சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போவது, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகளால் அதிக ரத்தப் போக்கு போன்றவை முக்கிய காரணங்கள். உடலில் எந்த ஒரு செல் வளர வேண்டும் என்றாலும் அதன் வளர்ச்சி ஊக்குவிக்க வைட்டமின் பி12

-Advertisement-

அவசியமாகிறது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும், ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு வளராமல் ரத்த சோகை ஏற்படும்.ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள்ரத்த சிவப்பணுக்கள் உருவாக தேவையான இரும்புச்சத்துள்ள உணவுகள் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.

மாதுளை, பேரிட்சை, பீட்ரூட் இவற்றினை எடுத்துக்கொண்டால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.