தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான நாட்டு வைத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள் ..!!

Health

தொண்டை கட்டுதல்: தொண்டை பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்வோம். இப்போது எல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக பேரை பாதிப்பவை. தொண்டையில் சதை வளர்வது, தொண்டை வலி, தொண்டை புண்,

தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல், தொண்டை அலர்ஜி, தொண்டை கட்டிக்கொள்ளுதல், தொண்டை நீர் கட்டி போன்ற பிரச்சனைகள் சிலவகை உணவு பழக்கம் மற்றும் சில வகை தீயபழக்கங்களினால் ஏற்படுகிறது.
அதாவது குளிர்ச்சியான பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை

உட்கொண்டபிறகு மேல் கூறப்பட்டுள்ள பிரச்னையில் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இந்த தொண்டை பிரச்சனைகளில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.இந்த தொண்டை புண் சரியாக டீ போடும் போது அதனுடன் கிராம்பு, மிளகு, ஏலக்காய், இஞ்சி ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து டீ போட்டு குடிக்கலாம்.

-Advertisement-

தொண்டை எரிச்சல் குணமாக:-
தொண்டை எரிச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது ஏதேனும் சூடான சூப் அருந்தலாம் இவ்வாறு அருந்துவதினால் தொண்டைக்கு கொஞ்சம் இதமாக இருக்கும்.

ஒரு ஸ்பூன் தேனுடன், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும் இந்த கலவையை அப்படியா விழுங்கலாம். அல்லது மிதமான சூட்டில் உள்ள நீருடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1/4 மஞ்சள் தூள் கலந்து பருகிவர தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொண்டை கட்டுதல் சரியாக:-
சித்தரத்தை என்ற மூலிகை இந்த தொண்டை கட்டுதல் பிரச்சனையை சரிசெய்ய மிகவும் பயன்படுகிறது. எனவே சித்த மருத்துவ கடைகளில் விற்கப்படும் இந்த சித்தரத்தையை வாங்கி வந்து. வாயில் போட்டு மென்று சாப்பிட இந்த தொண்டை கட்டுதல் பிரச்சனை உடனே சரியாகிவிடும்.