குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது வயிற்று வலி சார்ந்த பிரச்சனைகளாக தான் இருக்கும், இதற்காக நீங்கள் பதட்டப்பட வேண்டாம், குழந்தைகளுக்கு அதீத மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இருக்கும் போது மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பெரும்பாலும் அஜீரணக் கோளாறால் தான் குழந்தைகளுக்கு வயிற்றில் வலி ஏற்படும், முதுகை வளைத்தபடி இருப்பது, உணவை சரியாக சாப்பிட முடியாமல் இருப்பது, விக்கல், தொண்டையில் அடைப்பு ஏற்படுதல், வாந்தி, அடிக்கடி ஏப்பம் போன்றவை அஜீரணத்திற்கான அறிகுறிகள்.
குழந்தைக்கு பால் கொடுத்து முடித்த உடனே அவர்கள் ஏப்பம் விடுவது அவசியம். குழந்தைகள் பால் குடிக்கும் போது பாலுடன் சேர்த்து காற்றையும் உள்ளே இழுத்துக் கொள்வார்கள். இதனை சரி செய்வதற்கு அவர்களை சரியான முறையில் ஏப்பம் விட வைப்பது அவசியம்.
குழந்தைகள் தூங்கும் போது தலை 6 முதல் 8 இன்ச் வரை உயரமாக வைத்து இருக்க வேண்டும். மெத்தையின் அடியில் செங்கற்கள் அல்லது மரத்தால் ஆன பலகைகளை வைத்து உயரத்தை அதிகரிக்க வேண்டும். சோம்பு, இஞ்சி மற்றும் கெமோமில் தேயிலை ஆகியவற்றை எல்லாம்
நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி உங்கள் குழந்தைக்கு கொடுத்தால் அஜீரணம் சரியாகிவிடும்.ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் 2 டேபிள் ஸ்பூன் தேனுடன் சிறிது பட்டைத் தூளை சேர்த்து கொடுக்கலாம்.