உங்கள் நரம்புகள் பலம் பெற இந்த வகையான உணவுகளை சாப்பிடுங்கள் ..!!நம் அன்றாட வாழ்வில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்தான உணவுகள் எவ்வளவோ இருக்கின்றது. ஆனால் நாம் நம்
உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை தான் சாப்பிடுகிறோம். இன்றைய காலகட்டத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுபவர்கள் குறைவாகவே உள்ளனர். இதுபோலவே நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கக்கூடிய உணவுகள் அதிகம் உள்ளன. இன்று நம் பொதுநலம் பதிவில் நரம்புகளுக்கு பலத்தை தரக்கூடிய உணவுகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
பேரிச்சைப்பழத்தை பாலில் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது. இதை சாப்பிடுவதால் நரம்புகள் மற்றும் எலும்புகள் பலம் பெறுகிறது. இதை சாப்பிடுவதால் பலகீனமான உடல் கூட பலம் பெறுகிறது.வயதானவர்கள் தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிடுவதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கீரைகள்:
நரம்புகள் பலம் பெற கீரைகள் நல்ல பலன் அளிக்கின்றன. பொதுவாக பொன்னாங்கண்ணி மற்றும் மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் நரம்புகளை பலப்படுத்துகிறது. தினமும் ஏதாவதொரு கீரைகளை சாப்பிடுவதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நரம்பு மண்டலம் அதிகரிக்க மாதுளை பழம் சாப்பிடுவது நல்லது. மாதுளை பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இது நரம்பு பிரச்சனைகளை சரி செய்து உடலை பலப்படுத்துகிறது. இது நரம்புகளை வலுப்படுத்துகிறது.
உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி பிரண்டைக்கு உண்டு. பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு பலம் தருவதோடு நரம்புகளை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இதை வாரம் இரண்டு முறை சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தப்பட்டபிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள இந்த விடியோவை பார்க்கவும் ..