நம் அன்றாட வாழ்வில் தினசரி முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா, கெட்டதா ?? தினந்தோறும் எத்தனை முட்டை சாப்பிடலாம் ..?

Health

உடலுக்கு தேவையான விட்டமின் பி2, விட்டமின் பி12, விட்டமின் டி, செலீனியம், ஐயோடின், ஃபோலேட் மற்றும் புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அடங்கிய முட்டைகள் நம் உடலுக்கு ஆரோக்கியமானது தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் முட்டைக்கு மனம்

மயங்காத ஆட்கள் இருக்க முடியாது. இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகளை தவிர்ப்பவர்கள் கூட, ‘எக்கீடேரியன்’ (முட்டை மட்டும் சாப்பிடுபவர்) என வலம் வருவது உண்டு.வீடுகளில் பெரும்பாலும் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே முட்டை சமைக்கப்படும்.

ஆக, நாம் எடுத்துக் கொள்ளும் முட்டையின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். அதே சமயம், தினசரி வெளியே ஹோட்டல்களில் சாப்பிடும் பெரும்பாலான நபர்கள் தினசரி முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக, பேச்சிலர்களின் மதிய உணவு மற்றும்

-Advertisement-

இரவு உணவு வேளைகளில் ஆம்லெட் அல்லது ஆஃப் பாயில் இல்லாமல் சாப்பாடு முழுமை அடையாது. இப்படி தினசரி முட்டை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா, உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்தச் செய்தியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு திறன் வலுப்படும் : பல்வேறு வகையான நோய்களை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைக்க முட்டைகள் வழிவகை செய்யும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, இதில் உள்ள செலனீயம் என்ற சத்து இம்யூன் பூஸ்டராக செயல்படுகிறது.