வெந்தய விதைகள் நிறைய மருத்துவ குணங்களை பெற்ற இயற்கையான மூலிகை ஆகும். இதில் பெண்களின் மாதவிடாயை போக்கும் மருத்துவ குணங்களில் இருந்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை வரை காணப்படுகிறது.
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம். வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை
குறைக்கவும் உதவுகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது. இப்படி ஏராளமான நன்மைகள் தரும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து உண்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இன்னும் அறிந்து கொள்வோம்.
வயிற்றில் அமிலத்தன்மை உள்ளவர்கள் இரவில் 1 டீ ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்த வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் நெஞ்செரிச்சல், எதிக்களித்தல் போன்ற அமிலத்தன்மை பிரச்சினைகளை விரட்ட முடியும்.
வெந்தய விதைகளை 1 தேக்கரண்டி எடுத்து மிக்சியில் அரைத்து கொதிக்கும் தண்ணீரில் 1 தேக்கரண்டி அரைத்த பொடியை வடிகட்டாமல் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் வெந்தய டீ
வெந்தய டீயின் நன்மைகள்
இந்த வெந்தய டீயானது உடலின் கொழுப்புக்களை சேமித்து வைப்பதை தடுக்கிறது.வெந்தய விதைகளில் அதிகமான கேலன்டோமன்னன் இருப்பதால் இது நீரில் கரையக்கூடிய ஹெட்டோரோபாலிசாக்கரைடாக செயல்பட்டு கொழுப்பை குறைக்கிறதுமாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலியையும் குறைக்கிறது.சிறுநீரகத்தை சுத்தமாக வைத்திருக்கும்தாய் பால் சுரப்பு அதிகரிக்கும்.மாரடைப்பு வராமல் தடுக்கும்