தினந்தோறும் காலையில் கொதிக்க வைத்த சீரக தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் ..!!

Health

தினமும் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதை உணரலாம். சீரகம் உடலில் கெட்ட

கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, கலோரிகளை எரிக்கும். சீரகத்தில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் பொருளில் ஒன்று தான் சீரகம். இது உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

தினமும் காலையில் கொதிக்க வைத்த சீரக தண்ணீர் குடிப்பதனால் மிகுந்த பலனை தரும்.சீரகம் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. மேட்டுப்பாங்கான இடங்களிலும், மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது. காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்

-Advertisement-

சருமம்

சீரகத்தில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், காப்பர் மற்றும் மெக்னீசியம் சத்துகள் உள்ளன. இவை சருமத்தை பளபளக்க உதவுகிறது. சீரக தண்ணீருடன் மஞ்சள் கலந்து உபயோகித்தால் முகம் பொலிவு பெறும்.

சீரக தண்ணீர்

இரண்டு டேபிள் ஸ்பூன் சீரகத்தை, நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்துக்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

வயிற்றுக்கு நல்லது

அமிலத்தன்மை, குமட்டல், அஜீரண கோளாறுகள் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள் சீரக தண்ணீர் குடித்தால் மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி இது வயிறு வலியை குணமாக்கும். ஆற்றல் சோர்வாக இருக்கும் சூழலில் சீரக தண்ணீர் குடித்து வந்தால் மிகவும் நல்லது. இதனால், உடல் ஆற்றல் மேம்படும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

முகப்பரு

சீரகத்தில் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதனால், முகத்தில் ஏற்படும் முகப்பரு மறைய, சீரக தண்ணீர் பெரிதும் உதவுகிறது.

தாய்மார்

சில தாய்மார்களுக்கு குழந்தை பிறந்ததும் பால் மிக குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பால் சுரப்பிகளில் இருந்து பால் சுரக்க சீரக தண்ணீர் அருந்தலாம் .