கொய்ய பழத்திற்கு இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா ?? இதோ ..!!

Health

கொய்யா பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பதுண்டு ஏனென்றால் சத்துக்கள் அதிகம் அனைத்து இடங்களிலும் விளையக்கூடியது. கொய்யா பழம், இலை, வேர், பட்டை என அனைத்தும் மருத்துவ பயனுடையது.

கொய்யாவில் அதிக வைட்டமின் சி உள்ளது. இது பல் ஆரோக்கியத்திற்கும், எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடலாம்.வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்து காணப்படுகிறது.

செரிமானத்திற்கும், வயிற்று கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றை குணமாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.கண் நோய்கள் வராமல் தடுக்கிறது.கொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:- ஒரு கொய்யாப்பழத்தில் கார்போஹட்ரேட்,

-Advertisement-

விட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து, புரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது இரத்தம் சுத்தமாக:-கொய்யாப்பழத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட உடல் சோர்வு, பித்தம் நீங்கும். இரத்தம் சுத்தமாகும்.

கொய்யாப்பழம் எப்போது சாப்பிட வேண்டும்

கொய்யாப்பழத்தை தினமும் காலை, மதியம் உணவுக்கு முன் அல்லது உணவுக்கு பின் சாப்பிடலாம். அல்லது காலை, மாலை உடற்பயிற்சிக்கு முன் பின் சாப்பிடலாம். இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது குளிர்ச்சியை தருவதால் சளி, இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.