உங்களுக்கு சுகர் அளவு உயர்ந்துவிட்டதா ?? அப்போ இதை உடனே சாப்புடுங்க !!!

Health

பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த, கருவேப்பிலையை எப்படி வழக்கமாக சாப்பிடும் முறைக்கு கொண்டு வருவது என்பதை, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.முடி உதிர்வை கட்டுப்படுத்துவதில் இருந்து உடலில் ஏற்படும் பலவகையான நோய்களுக்கும் கருவேப்பிலை உன்னத மருந்தாக பயன்படுகிறது. .

இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட, கருவேப்பிலை நம்முடைய பாரம்பரியமான சமையல்முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இது இரைப்பை குடல் பிரச்சினைகளை குணப்படுத்தவும் முடி உதிர்தலைக் குறைக்கவும் ஒரு வீட்டு மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், அறிவியல் ஆராய்ச்சியின் படி, கருவேப்பிலை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.கருவேப்பிலையில் உள்ள ஆல்கலாய்டுகள் மற்றும் பினாலிக் கலவைகள்,

-Advertisement-

பாதுகாப்பு மற்றும் சக்தி வாய்ந்த ஆரோக்கியப் பொருட்களாகும். இலைகளில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலை ஆரோக்கியமாகவும், நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றன.கருவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற பல்வேறு

வைட்டமின்களின் இருப்பு உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றவும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அடக்கவும் உதவுகிறது.கருவேப்பிலையை தொடர்ந்து உட்கொள்வது இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது.

அதுமட்டுமின்றி, கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது, கல்லீரலைப் பாதுகாக்கிறது, கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது.நீரிழிவு நோயாளிகளுக்கு 30 நாள்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், காலையிலும் இரவிலும் கருவேப்பிலை தூள் கொடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில்,

அவர்களது உடலில் ரத்த சர்க்கரை அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது தெரிய வந்தது.இது மட்டுமல்ல, இந்த அதிசய இலையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வலி நிவாரணி பண்புகள் இடம்பெற்றுள்ளன.