முருங்கை கீரையை இப்படி சாப்பிடுவதால் ஆஸ்துமா மற்றும் மார்பு சளி குணமாகும் ..!!!

Health Uncategorized

பல்வேறு நன்மைகளை கொண்டது முருங்கை கீரை. இது, உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. முருங்கை கீரையை தினமும் ஒருபிடியாவது உணவில் சேர்த்துக்கொள்ள பல நோய்கள் தீரும் வலி நிவாரணியாக விளங்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் உடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. நாவில் உண்டாகும் புண்கள், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு சித்தரத்தை மருந்தாகி பயன்தருகிறது.

நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சித்தரத்தையை வாங்கி ஒரு துண்டு எடுத்து நசுக்கி நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் சரியாகும். வாய் துர்நாற்றம் இல்லாமல் போகும். இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் மற்றும் உடலின்

-Advertisement-

வெப்பத்தை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுக்கு முருங்கை கீரை சூப் நல்லது.முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து

நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள்.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரையாகும்.