முகப்பரு வந்தால் மிளகை இப்படி சாப்பிட்டால் உடனடி தீர்வு ..!!

Health

தமிழ் இலக்கியத்தில் உள்ள திரிகடுகத்தில், மிளகு இரண்டாவது இடத்தை வகிக்கிறது
மிளகு ஓர் சிறந்த மூலிகை மருந்து என இப்போது தான் மேல்நாட்டு ஆய்வாளர்களும், மருத்துவர்களும் அறிந்து வருகிறார்கள். செரிமானம், தும்மல், சளி, கபம், பொடுகு, பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் பலவகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது

சுற்று சூழல் மாறுதல் காரணமாக நோய் தொற்று ஏற்படுவது வழக்கம்.இந்த பிரச்சனைக்கு தினமும் காலை எழுந்தவுடன் 6 மிளகை சாப்பிட்டு பாருங்கள்.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.

ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.ஒன்பது குப்பைமேனி இலையுடன் 5 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலை குடிக்கவும். இதனை 3 நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.

-Advertisement-

மிளகுடன் நொச்சி இலையை சேர்த்து கசாயமிட்டு குடித்து வர, மலேரியா சுரம் குணமாகும். இந்த கசயத்தால் வயிற்று வலி, உப்புசம், நாக்குப்பூச்சி, ஆகியவைகளும் குணமாகும்.தொண்டைக்கட்டு, பல் வலி போன்றப் பிரச்சனை அதிகமாக இருந்தால், மிளகுத்தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வாய்க் கொப்பளித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.

முகப்பரு மறைய
மிளகு, சந்தனம், ஜாதிக்காய் இவை மூன்றையும் நன்கு அரைத்து முகப்பருவின் மீது பூசி, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர முகப்பரு மறையும்.