சிறுநீரக கல்லைக் கரைக்கும் நன்னாரி பற்றி யாரும் அறியாத சித்த மருத்துவ குறிப்பு இதோ ..!!
சித்த மருத்துவத்தில் இதன் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. இலங்கை, இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது.உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன.
இந்தக் கற்கள்தான் சிறுநீரகம்,சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன.குறைந்த அளவு நீர் அருந்துதல், அதிக அளவு மாமிச உணவு உண்ணுதல், குளிர்பானங்கள் அருந்துதல், வைட்டமின் ‘ஏ’ குறைபாடு மற்றும் வெயில் காலத்தில் உடம்பிலுள்ள நீர் அதிகமாக வெளியேறுதல், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள்,
சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்திருத்தல் போன்ற காரணங்களால் கற்கள் தோன்றலாம்.பச்சை நன்னாரி வேரை நீர் விட்டு அரைத்து பாக்களவு வெந்நீரில் தினம் காலையில் ஒரு வேளை கொடுத்து வர பற்களிலிருந்து வடியும் இரத்தம் நிற்கும்.நன்னாரி வேரை நன்கு சுத்தம் செய்து அரைத்து, பசும்பாலில் அரைத்து, மூன்று தடவை பாலில் கரைத்து வடிகட்டி,
தினமும் 3 வேளை 5 நாட்கள் உண்டு வந்தால் உதிரப்போக்கு தீரும்.நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.