அருகம்புல்லின் மகிமையும், மருத்துவமும் என்னவென்று தெரிந்தால் ஆசிரியப்படுவீங்க ..!!

Health

அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல், வரப்புகள், வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணெய்யையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.

அருகம்புல்லை நிரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இத நோய்க்கு இதமளிக்கும். அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

-Advertisement-

திடீரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும், அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக் கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.

அருகம்புல் சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இந்த சாறு தணிக்கிறது. நரம்புத் தளர்ச்சி மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

பொதுவாக நீங்கள் அலாபதி மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும், அருகம்புல் சாற்றைப் பருக எந்தவித தடையும் இல்லை. அருகம்புல் சாறு குடிப்பதால், பல நன்மைகள் கிடைக்குமே தவிர எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது.