உங்கள் முடி கிடுகிடுனு நீளமா வளரனுமா? அப்போ குப்பை என தூக்கி வீசும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்…!!

Health

தினமும் நாம் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றுகிறோம். ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்கு தெரிவதில்லை. அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம். அரிசி கழுவிய பிறகு அந்த தண்ணீரை வைத்து முடியை சுத்தம் செய்தால் முடி பாதிக்கப்படுவது தடுக்கலாம்.

அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து நன்றாக 2 முறை கழுவ வேண்டும். அதன் பின் அதனை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சரும செல்களுக்கு சென்று முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு சருமமும் பொழிவு பெரும்.

மேலும் முடி அதிக வறட்சியோடு இருந்தால் அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசிய பிறகு சிறிது நேரம் ஊற வைத்து அதன் பின் சுத்தமான நீரில் கூந்தலை அலச வேண்டும். அப்படி செய்தால் கூந்தலின் மென்மைத் தன்மை அதிகரிக்கும். இதை நீங்க வீட்டிலே செய்யலாம்…

-Advertisement-