கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. கீரைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி கீரைகளில் பல வகைகள் உள்ளன. அரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கும். நோய்கள் எளிதாக உடலை தாக்காமல் பாதுகாக்கும்.
மேலும் காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பி டுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அரை கீரையை குழம்பு, கூட்டு செய்து சாப்பிடுவதால் குடல் புண்கள் சரியாகி விடும். அரை கீரை மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.
கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள் அரை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை உடைய உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. இதற்கு அரை கீரையை தினமும் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகி இருந்தால் அது கரையும்..