முட்டையை குளிர்சாதன பெட்டியில் (ஃப்ரிட்ஜில்) வைக்கிறோம். இப்படிச் செய்வதன் மூலம் அதில் இருக்கும் சத்துகள் அழிந்து போவதோடு உடலுக்கும் தீங்கை விளைவிக்கும். வெளியில் வைத்தால் 1,2 நாட்கள் மட்டுமே முட்டை நன்றாக இருக்கும். அதற்கு அறை வெப்பநிலையில் அதனை வைத்திருப்பதே காரணம். ஆனால் பல நாட்கள் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகிறோம்.
குளிர்சாதன பெட்டியில் (ஃபிரிட்ஜில்) முட்டையை வைத்தால் பாலைப் போல் திரிந்து கெட்டியாகி விடும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்த முடியாது. குளிர்சாதன பெட்டியில் (‘ஃப்ரிட்ஜி’ல்) வைத்து விட்டு வெளியே எடுக்கும் போது முட்டை அறை வெப்ப நிலைக்குத் திரும்பும்.
முட்டையின் நுண்ணிய துளைகளின் வழியே பாக்டீரியாக்கள் உள்ளே போய்விடும். முட்டையில் இருக்கும் பாக்டீரியா டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும். பொதுவாக அதிக வெப்பம் அல்லது அதிக குளிரைத் தாங்கும் பாக்டீரியாக்கள் உண்டு. மேலும் அந்த வகையில் “சால்மோனெல்லா டைஃபி” என்கிற பாக்டீரியாதான் மனிதர்களுக்கு டைபாய்டு காய்ச்சலை உருவாக்குகிறது.
முட்டையில் இந்த வகை பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் என்பதால் அவை எளிதில் அழியாது. குறிப்பாக குளிர்சாதன பெட்டியில் (ஃப்ரிட்ஜில்) வைத்திருக்கும் போது தூங்கும் பாக்ட்டீரியாக்கள் அறை வெப்ப நிலைக்குத் திரும்பும் போது பழைய நிலைக்கு வரும். சூடுபடுத்தும் போது பாக்டீரியா அழிந்து விடும்.
குளிர்சாதன பெட்டியில்வைத்த எந்த வகையான உணவுப் பொருளையும் எடுத்து உடனே பயன் படுத்தக்கூடாது. அறை வெப்பநிலைக்கு கொண்டு வருவது அவசியம். அதாவது அதிலுள்ள குளிர்ச்சி முழுமையாக நீங்கி பொருளை இயல்பு நிலைக்கு வந்த பின்னே பயன்படுத்த வேண்டும்.