தினசரி 4 கப் டீ அருந்தினால் சர்க்கரை நோய் வராதாமே”எப்படி?

Health

உலக அளவிலே பொதுவாக டைப் 2 வகை சர்க்கரை நோய் தான் பெருமளவில் காண்கிற உடல்நிலையாக இருந்து வருகிறது.தவறான வாழ்க்கை முறை உணவுப்பழக்கம் மற்றும் மரபு வழி சார்ந்து ஒருவரை இந்த நோய் அதிகம் தாக்குகிறது.2021ஆம்வருடமுடிவு படி உலக அளவில்

சுமார் 530 மில்லியன் மக்கள் சர்க்கரை நோய் குறைபாடுட வாழ்வதாக அறியப்படுகிறது, மேலும்  இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நாடுகளில் கூட நான்கில் மூன்று பேருக்குத்தான் இந்த பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது,மேலும் இயற்க்கையாகவே சுரக்கவேண்டிய இன்சுலின் சுரக்காமல் போதல் அல்லது சரியாக சுரக்காமல் இருத்தல்தான்

டைப் 2வகை சர்க்கரைநோய்,இதைகுறைக்கவேண்டும்என்றால் சிகிக்சைமுறையும் தாண்டி உணவு பழக்கத்தையும் ,வாழ்க்கைமுறையையும் முற்றிலும் மாற்றிக்கொள்ளவேண்டும் ,மேலும் அதிக கார்போஹைட்ரெட் மற்றும் சர்க்கரை சத்து அதிகமுள்ள உணவுகள் உட்க்கொள்வதை தவிர்த்து அதிக நார்ச்சத்துள்ள கீரைகள் ,

-Advertisement-

பழங்கள் ஆகியவற்றை உண்ணவேண்டும்,இந்த பட்டியலில் தற்போது டீயும் இணைத்திருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன,நம்மில்பல பேருக்கு டீ இல்லாமல் நாளே துவங்காது .ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகமாக பால் பொருட்கள் அருந்தக்கூடாது என்பதால் டீயும் அருந்த முடியாது ,அனால் பிளாக் டீ ,க்ரீன்டீ போன்றவைகளை அருந்தினால் சர்க்கரை அளவு

கட்டுப்படுத்த வாய்ப்பு இருப்பதாக சமீப ஆய்வில் தெரியவந்துள்ளது,சமீபத்தில் லட்சக்கணக்கான மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி ஒரு நாளைக்கு மூன்று கப் டீ அருந்தும் நபர்களுக்கு 4 சதவீதமும் ,அதற்க்கு மேல் அருந்துபவர்களுக்கு 17 சதவீதமும் டைப் 2 வகை அபாயம் குறைவதாக கண்டறிந்துள்ளனர்,ஆய்வுகளின் கருத்துப்படி இதற்கான காரணம் பாலிபீனால்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் தானாம்,

மேலும் க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் கூறுகள் இன்சுலின் குறைபாடுகளை சரி செய்ய உதவுதாக தெரிவித்துள்ளனர். ஆனால், சர்க்கரை குறைபாடுகளை பொறுத்த வரைக்கும் இந்த முடிவு நபருக்கு நபர் மாறுபடுமாம் மேலும் சர்க்கரையை குறைக்கிறேன் என்ற போர்வையில் க்ரீன் டீயில் சுவைக்காக சர்க்கரையை அதிகமாக சேர்த்துக்கொள்வதும் ,பிற டயட் ஏதும் பின்பற்றாமல் இருப்பதும் எந்த பலனும் தராது .

தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதும் ,இது போன்ற புது முயற்சிகளை மேற்கொள்ளும்போதும் உங்களது மருத்துவரிடம் கலந்து அவரது ஆலோசனைகளின் மூலம் துவங்குங்கள்..