தினமும் உணவில் பயன்படுத்தும் பொருள்களில்… இத்தனை சித்த மருத்துவ குணங்களா…???

Health

கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய சித்த மருத்துவ பொருட்களும் அது நம் உடலில் எந்த நோய்க்கு மருந்தாகும் என்பதை இந்த பதிவில் சற்று விளக்கமாகப் பார்க்கலாம். தினமும் தவறாது இந்த சித்தமருத்துவ பொருட்களை உண்டுவர பலன்கள் எளிதில் கிடைக்கும்.

எளிதில் கிடைக்கக்கூடிய கலப்படமில்லாத தேனை வெதுவெதுப்பான நீரில் அல்லது சூடான பாலில் தினமும் அருந்தி வர உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் மேலும் இருமல் சளி நாள்பட்ட இருந்தாலும் விரைவில்  குணமாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நாட்டுமருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும் முருங்கை விதையை பொடி செய்து சூடான பாலில் கலந்து தினமும் இரவில் படுக்கும் முன் சாப்பிட்டுவர ஆண்மை தன்மை குறைவை விரைவில் போக்கலாம். ஆண்மை தன்மை குறைவை போக்க விரும்புவோர் இதனை பயன்படுத்தி பாருங்கள்.

-Advertisement-

நமக்கு எளிதில் கிடைக்கும் அருகம்புல் சாறு அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது காய வைத்து பொடியாக வாரம் ஒரு முறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும் இதை செய்துபாருங்கள் பலன்கிடைக்கும்.

சிறிதளவு வெள்ளைப் பூண்டை வெற்றியுடன் சேர்த்து நன்கு மசித்து அரைத்த விழுதை தினமும் தோலில் தேய்த்து குளித்து வாருங்கள் உடலில் உள்ள வெளுப்பும் தேமல் போன்ற தோல் வியாதிகளும் விரைவில் குணமடையும்.

நீங்கள் எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது பழக்கம் மற்றும் புகை பழக்கம் இருந்தால் அது அந்த மருந்தின் வீரியத்தை நம் உடலில் செயல்படும் வேகத்தையும் குறைக்கும் ஆகவே இந்த இரு பக்கங்களையும் கைவிட்டுவிட்டு மருந்துகளை உட்கொண்டால் நலமாக இருக்கும்

abu