இரவில் தப்பி தவறிகூட இந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளாதீர்கள்…!!!

Health

நாம் இரவு எப்போதும் தூங்குவதற்கு முன்பு சத்தான உணவு பொருட்களை சாப்பிடுவது அவசியம் அப்படி இருக்கும்போது இந்த ஆண் 5 உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.

இரவு நேரத்தில் கோதுமை பயன்படுத்தி செய்யும் எந்த பொருளையும் தவிர்ப்பது நல்லது ஏனெனில் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது உடலில் ஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது எதற்காக கூறுகிறோம் என்றால் கோதுமை உணவு ஜீரணம் செய்வதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக் கொள்வது எப்போதும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு நல்ல விஷயமாகும் ஆனால் பச்சைக்காய்கறிகள் இரவில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது ஏனெனில் பச்சைக்காய்கறிகள் எடுத்துக்கொண்டால் அஜீரணக் கோளாறுகள் செரிமான கோளாறுகள் ஏற்படும் ஆகவே இரவில் காய்கறிகளை வேக வைத்து உண்பது நல்லது.

பொதுவாக மைதா பொருட்களில் நார்ச்சத்து குறைவாகவே இருக்கும் இதனை பகலில் எடுத்துக்கொண்டாலே செரிமானம் ஆவதற்கு வெகு நேரம் பிடிக்கும் அதுமட்டுமல்லாமல் மலச்சிக்கல் ஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளை வரும் ஆகவே இரவு நேரங்களில் மைதா சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது.

-Advertisement-

தயிர் இதை காலை மற்றும் மதிய வேளைகளில் எடுத்துக்கொள்ளும் அளவு இரவில் எடுத்துக்கொள்ளக் கூடாது ஏனெனில் தயிரில் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்திருக்கிறது இதனை இரவில் எடுத்துக்கொண்டால் நாசிப் பாதையில் சளி உருவாகலாம் இது இருமல் மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளை கொண்டு வரும் அதனால் இரவில் தயிர் உண்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக நாம் இரவில் சாப்பிடும் போது அதிக அளவு சோடியமுள்ள பொருட்களை தவிர்ப்பது நல்லது இரவு 7 மணிக்கு மேல் உப்பு சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் எதையேனும் ஆயுர்வேதத்தில் அதிகளவில் சுட்டிக்காட்டப்படுகிறது எனவே உப்பை அதிக அளவில் இரவில் அதிகம் சேர்த்துக்கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.

Copyright www.pothunalam.com
abu