நல்லா கிளியை வளர்த்து பன்னிகிட்ட கொடுத்துட்டிங்க… “ரவீந்தர் – மஹாலட்சுமி திருமணம்” குறித்து நடிகை கடும் கண்டனம்!

Cinema

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மஹாலட்சுமி திருமணம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்கள் செய்துவரும் நிலையில் தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்களுக்கு பிக்பாஸ் நடிகை காஜல் பசுபதி பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அந்த செய்தியை தான் இப்பொது பார்க்க போகிறோம்.

திடீரென்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் நடிகை மஹாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த தம்பதிக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் பணத்திற்காகத்தான் மஹாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக நெட்டிசன்கள் ஒருசில கடும் விமர்சனம் செய்தனர்.

-Advertisement-

இந்த நிலையில் ஒரு நெட்டிசன் தவறாக ’கிளியை வளர்த்து பன்னிகிட்ட கொடுத்தாங்க’ என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவிற்கு பிக்பாஸ் “நடிகை காஜல் பசுபதி” அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தாலும் இங்க நயன்தாரா தான் தப்பு என்றும் மஹாலக்ஷிமி ரவியை திருமணம் செய்தாலும் இங்கயும் மஹா தான் தப்பு என்றும் கூறுகிறீர்கள். என்ன ஒரு ஆம்பள புத்தி என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.