நம்ம ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிசாமி வனிதாவிற்கு ஒன்றரை வயதில் அஜித் என்ற மகன் உள்ளார். அப்பா அம்மா இருவரும் தனது பணியில் அதாவது பழனிசாமி வீட்டிற்கு வெளியில் வேலை செய்துக்கொண்டிருக்க, மனைவி வனிதா சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்துள்ளார்.
குழந்தை எப்போதும் அம்மா அருகில் தானே இருக்கும் அப்படி சமையல் அறையில் தரையில் இருந்த பாத்திரத்தை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அதில் தனது தலையை விட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை, பாத்திரத்தில் நல்ல வசமாக சி க்கிக்கொண்டுள்ளது. பாத்திரத்திலிருந்து தலை எடுக்க முடியாமால் குழந்தை அ லறியுள்ளது.
பதறி அடித்து ஓடி வந்த குழந்தையின் பெற்றோர், மாட்டிக்கொண்ட பாத்திரத்தை எடுக்க நீண்ட நேரம் போராடியும், அவர்களால எடுக்க முடியவில்லை. வலி தாங்க முடியாமல் குழந்தை துடிதுடித்து அழுதுள்ளது. இதனையடுத்து, பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் தலையை பாத்திரத்திலிருந்து தீயணைப்பு துறையினர் எடுக்க முடியவில்லை. அதனால், குழந்தையில் தலை மாட்டிக்கொண்ட பாத்திரத்தை வெட்டி எடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தையின் த லையில் மா ட்டிக்கொண்டிருந்த பா த்திரத்தை வெட்டி அகற்றினர்.பரமக்குடி தீயணைப்பு துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டனர். சிறு குழந்தை பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய தீயணைப்பு வீரர்கள், அழுதுகொண்டே இருந்த குழந்தையை தூக்கி ஆசுவாசப்படுத்தினர்.