சொல்லுங்க..!! வெறும் வயிற்றில் ஓம நீர் குடிக்கலாமா? தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

சொல்லுங்க..!! வெறும் வயிற்றில் ஓம நீர் குடிக்கலாமா? தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Health

மிகச்சிறிய ஓர் மூலிகை விதை தான் ஓமம். ஓமத்தில் தைமோல் என்னும் உட்பொருள் உள்ளது.இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது.ஓமத்தினால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமும் அதில் உள்ள தைமோல் தான்.ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமம் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இன்று ஓம நீரை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

ஓம பானம் செய்வது எப்படி?

ஓமத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் அந்த வெதுவெதுப்பான நீரை குடித்து வரலாம்.ஓமத்தில் உள்ள முழு சத்துக்களையும் நீரின் மூலம் எளிதில் பெற முடியும். அதற்கு 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.வேண்டுமானால், ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்தும் பருகலாம். பின் மறுநாள் காலையில் ஓமத்தை நீரில் நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சளி மற்றும் இருமலுக்கான ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியம் தான் இது. அதிலும் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பருகினால், நெஞ்சி சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

குளிர் காலத்தில் அச்சமின்றி இந்த பானத்தை பருகலாம். பக்கவிளைவுகள் அறவே இல்லை.
தினமும் காலையில் பருகும் போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றது.
இது எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக்கும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவி புரிகின்றது. சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம்.

காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும்.
ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.
வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஓமத் திரவம் நல்ல ஜீரண சக்தியை தரும்.
ஜீரணத்திற்கு மட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் திரவம் அருமருந்து.
மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது.