எவ்வளவு பெரிய தழும்பா இருந்தாலும் மறைக்கும் சக்தி இந்த ஒரே ஒரு பொருளுக்கு உண்டு….!

எவ்வளவு பெரிய தழும்பா இருந்தாலும் மறைக்கும் சக்தி இந்த ஒரே ஒரு பொருளுக்கு உண்டு….!

Health

தழும்புகள் என்பது ஒரு குறுகிய காலத்தில் தோலின் போது தோன்றும் கோடுகள். பொதுவாக இவை இடுப்பு, தொடைகள் அல்லது அடிவயிறு போன்ற இடங்களில் தோன்றும்.இவற்றை போக்க ஏராளமாக நிவீன சிகிச்சை முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.அவற்றை விட இயற்கை முறையில் தழும்புகளை போக்குவது கூடுதல் நன்மை கொடுக்கும்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காபி மற்றும் தேங்காய் எண்ணையுடன் தயாரிக்கப்பட்ட களிம்பு குறித்து தான் பார்க்க போகின்றோம். இது உடலின் வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே. உங்கள் உடலில் அனைத்து பாதிக்கப்பட்ட தோலிற்கும் ஊட்டமளிக்கிறது.

தேவையான பொருட்கள்
5 தேக்கரண்டி அரைக்கப்பட்ட காபி கொட்டைகள் (75 கிராம்)
3 தேக்கரண்டி ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் (45 கிராம்)
1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் (15 கிராம்)
2 தேக்கரண்டி மினரல் வாட்டர் (30 மிலி)

செய்முறை

ஒரு கண்ணாடி ஜாடிக்குள் அரைத்த காபித்தூள், தேங்காய் எண்ணெய், அலோ வேரா ஜெல் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்குங்கள்.ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை ஒரு சில நொடிகள் கலவையை பெற ஒரு மர ஸ்பூன் கொண்டு நன்கு கலக்குங்கள்.குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் ஜாடியை இருக்க மூடி பத்திரப்படுத்துங்கள்.

பயன்படுத்தும் முறை

வடுக்கள் மற்றும் தழும்புகள் உள்ள பகுதிகளில் பாதிப்பு அளவை பொறுத்து இந்த களிம்பை நன்கு தேய்க்கவும்.ஐந்து நிமிடங்கள் மென்மையான மசாஜ் செய்து, பின்னர் அதை மற்றொரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள்.பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை வாரத்துக்கு 2 முறை அல்லது நேரம் கிடைத்தால் தினமும் கூட செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.